Budget 2026: மத்திய பட்ஜெட் தாக்கல்: ரயில்வே துறைக்கு அதிக நிதியா?

FM Nirmala Sitharaman Presents Union Budget 2026 - 27 : வருகிற மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Union Budget 2026 - 27 FM Nirmala Sitharaman Presents Central budget  Likely To more funds for Indian railway sector here is Expectations in Tamil
Union Budget 2026 - 27 FM Nirmala Sitharaman Presents Central budget Likely To more funds for Indian railway sector here is Expectations in TamilSource : Google
2 min read

மத்திய பட்ஜெட் தாக்கல்

FM Nirmala Sitharaman Presents Union Budget 2026 - 27 Expectations Date in Tamil : மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். 2026-2027 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டை பொறுத்தவரை முதல் முறையாக இந்த முறை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

ரயில்வேக்கு தனி பட்ஜெட் என தகவல்

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டது முன்பு ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில்தான் ரயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாக கூடும். ரயில்வேயை பொறுத்தவரை உள்கட்டமைப்புகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வயது முதிர்ந்தவர்களுக்கு கட்டண தள்ளுபடி

அதேபோல், தற்போது வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில் சேவைகளில் ரயில்வே துறை கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்காக கட்டண சலுகை கொரோனா காலக்கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. அதாவது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரயில்களில் 40% கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது.

மத்திய பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை இந்த சலுகை தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதால், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மருத்துவம், ஆன்மீகம் போன்ற காரணங்களுக்காக அடிக்கடி ரயில்களில் செல்லும் மூத்த குடிமக்களுக்கு இது பெரும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் ரயில் பயணிகள் மத்தியில் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உயர்த்த பட்ட ரயில் கட்டணம்

மூத்த குடிமக்களில் பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த சலுகை நிறுத்தப்பட்டு இருந்தது. கொரோனா முடிந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி ரயில்வே வருவாய் முன்பைப் போல அதிகரித்துள்ளது. நற்செய்தி வருமா என்ற எதிர்பார்ப்பு இதனால் மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கக் கூடிய அந்த சலுகை மீண்டும் எப்போது கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவி வரும் நிலையில், இந்த பட்ஜெட்டிலாவது அந்த நற்செய்தி வருமா என்ற எதிர்பார்ப்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வேயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. 215 கிலோமீட்டருக்கு மேல் பயணங்களுக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

உச்சம் தொட்ட மத்திய பட்ஜெட்

சாதாரண ரயில்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாகவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நான் - ஏசி மற்றும் ஏசி பிரிவுகளில் 2 பைசா கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், இதன் பயனாக மூத்த குடிமக்களுக்கு சலுகை மீண்டும் கொண்டு வரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கேள்வியாக இருந்த நிலையில், தற்போது வரவுள்ள மத்திய பட்ஜெட் மீது அனைவருக்கமான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in