Budget 2026 : துறைகளுக்கான நிதி, போக்குவரத்து ரூ.5.98 லட்சம் கோடி

Union Budget 2026-27 : மத்திய பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
Union Budget 2026-27 has allocated funds department-wise. Let's look at its details.
Union Budget 2026-27 has allocated funds department-wise. Let's look at its details.Source : Google
1 min read

மத்திய பட்ஜெட் 2026-27

Union Budget 2026 : 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும், துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

போக்குவரத்து துறைக்கு அதிக நிதி

அதன்படி, இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்துத் துறைக்கு ரூ.5,98,520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு குறைந்த நிதி

குறைந்த பட்சமாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை பார்க்கலாம்

துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கோடிகளில் :

1. போக்குவரத்து 5,98,520

2. பாதுகாப்பு 5,94,585

3. ஊரக வளர்ச்சி 2,73,108

4. உள்துறை அமைச்சகம் 2,55,234

5. வேளாண்மை மற்றும் சார்பு துறைகள் 1,62,671

6. கல்வி1,39,289

7. எரிசக்தி 1,09,029

8. சுகாதாரம் 1,04,599

9. நகர்ப்புற வளர்ச்சி 85,522

10. தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு 74,560

11. வர்த்தகம் மற்றும் தொழில் 70,296

12. சமூக நலன் 62,362

13. அறிவியல் தொழில்நுட்பம் 55,756

14. வரி நிர்வாகம் 45,500

15. வெளியுறவு விவகாரம் 22,119

16. நிதி அமைச்சகம் 20,649

17. வடகிழக்கு மாநிலங்கள், வளர்ச்சித் திட்டங்கள் 6,812

மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பயோ பார்மா சக்தி திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கனிமவளங்கள் நிறைந்த மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, ஆந்திராவில் அரிய கனிமவள மண்டலங்கள் (Rare Earth Corridors) அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளங்களுக்காக நாம் வெளிநாடுகளை நம்பி, பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு வருகிறோம். இந்தியாவிலேயே தேவையான அளவு கனிம வளங்கள் கண்டறியப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தால், அந்நிய செலாவணி மிச்சமாகும்.

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in