சிவப்பு சூட்கேஸ் to டேப்லெட் வரை : இந்திய பட்ஜெட்டின் வரலாறு

Union Budget 2026-27of India History in Tamil : இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் என்பது, பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி, இன்று வரை மாற்றங்களை கண்டு வரலாறு படைத்து வருகிறது.
Union Budget 2026-27 Indian been making history, starting from the British rule, continuing to see changes until today
Union Budget 2026-27 Indian been making history, starting from the British rule, continuing to see changes until todayGoogle
1 min read

நிதி நிர்வாகத்தின் முதுகெலும்பு :

India Budget Journey From Suitcase To Digital Tablet Key Union Budget 2026-27of India History in Tamil : இந்தியாவின் நிதி நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குவது மத்திய பட்ஜெட். சூட்கேஸில் ஆவணங்களை கொண்டு வருவதில் தொடங்கிய பட்ஜெட் வரலாறு, டிஜிட்டல் டேப்லெட் வரை நவீனத்துவம் பெற்றுள்ளது.

இந்திய பட்ஜெட்டின் வரலாறு

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது.

முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 அன்று பிரிட்டிஷ் அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதை வழங்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்சன்.

வருமான வரி அறிமுகம்

ஜேம்ஸ் வில்சன் தான் முதன்முதலில் இந்தியாவில் 'வருமான வரி' (Income Tax) முறையை அறிமுகப்படுத்தினார்.

இது இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், நவீன நிதி முறைக்கு, வருவாய்க்கு அதுவே அடித்தளம் அமைத்தது.

சுதந்திர இந்தியா முதல் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

இவர் தமிழகத்தை சேர்ந்தவர். அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை தமிழரைச் சாரும்.

ஆங்கிலம் to இந்தியில் பட்ஜெட்

தொடக்கத்தில் பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 1955-56ம் நிதியாண்டில், அப்போதைய நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் பட்ஜெட் ஆவணங்களை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கொண்டு வந்தார்.

1977 வரை பட்ஜெட் ஆவணங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே அச்சிடப்பட்டன, பின்னர் அது மிண்டோ சாலைக்கு மாற்றப்பட்டது.

நேரம் மாற்றம் தேதியில் மாற்றம்

1999 ஆம் ஆண்டு வரை லண்டன் நேரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது,

இதை அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணி மாற்றி அமைத்தார்.

வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

2017ம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றினார்.

ரயில்வே பட்ஜெட் இணைப்பு

இதன் மூலம் புதிய பொருளாதார நிதியாண்டு தொடங்கும் முன்பே (ஏப்ரல் 1) பட்ஜெட்டை வழிவகை செய்யப்பட்டது.

அதேப்போல் 92 ஆண்டுகளாகத் தனியாக இருந்த ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

காகிதமில்லா பட்ஜெட்

2021ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாரம்பரியமான பட்ஜெட் சூட்கேசுக்கு பதிலாக, 'பஹி-காதா' (Bahi-Khata) உறையில் வைக்கப்பட்ட டேப்லெட் (Tablet) பயன்படுத்தப்பட்டது.

=====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in