”10 ஆண்டு சிறை, 10 கோடி அபராதம்” : வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தயார் : அமைச்சரவை ஒப்புதல், 27ல் தாக்கல்.!

நீட் வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
Union Cabinet approved new bill aimed at preventing irregularities  as  leaking of NEET question papers
Union Cabinet approved new bill aimed at preventing irregularities as leaking of NEET question papersAI generated
2 min read

எம்பிபிஎஸ் - நீட் தேர்வு

நம் நாட்டில எம்பிபிஎஸ் படிப்பில சேர நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வே அவசியம் இல்லை, வேண்டாம் என்று தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

வினாத்தாள் லீக் - மறு தேர்வு

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது, நாடு முழுவதும் அதிர்வலைகள ஏற்படுத்துச்சு. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு இருக்காங்க.

கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம்

இருந்தாலும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்ன்னு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்தாங்க.

35வது நாளாக போராட்டம்

35வது நாளாக அவர்கள் போராட்டம் நீடிக்குது. டெல்லி ஜந்தர் மந்தர்ல அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கிட்டு வர்றாங்க. அவங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிஞ்சிக்கிட்டே வருது.

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இதனால், ஒரு வகையில் தலைநகர் டெல்லி ஸ்தம்பிச்சு இருக்கு அப்படின்னே சொல்லலாம். தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிங்களில் கல்லூரி மாணவர்கள் சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவா வகுப்புகள புறக்கணிச்சு, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வர்றாங்க.

நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால, இந்த வாரம் முழுவதும் இருஅவைகளும் முடங்கின. ஒருபக்கம் போராட்டக்காரர்களோட மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு வருது.

விரைவு நீதிமன்றங்கள் அமைப்பு

இந்தநிலையில், மோசடியில் ஈடுபடுவோங்க மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டு வருது.

முதல்​கட்​ட​மாக, டெல்லி உயர் நீதி​மன்​றம் சார்​பில் விரைவு நீதி​மன்​றம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மும்பை உயர் நீதி​மன்​றம் சார்​பில் 2 விரைவுநீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இது​போல அனைத்து மாநிலங்​களி​லும் விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்படும். இங்கு 3 முதல் 6 மாதங்​களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்​கப்​படும்.

புதிய மசோதா தயார்

மேலும், தவறு செய்பவங்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வகை செய்யும், புதிய மசோதாவும் தயாரிக்கப்பட்டு இருக்கு.

வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோ​தா

இந்த சூழலில்ல டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் மத்​திய அமைச்​சர​வைக் கூட்​டம் நடந்துச்சு. இதில், வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

நாடாளுமன்றத்தில் தாக்கல்

நாடாளு​மன்​றத்​தில் இந்த புதிய மசோதா 27ம் தேதி அதாவது திங்கட்கிழமை தாக்​கல் செய்​யப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​து.

முக்கிய திருத்தங்களோடு மசோதா

இப்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத் தேர்​வு​கள் சட்​டம் 2024-ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்கிய திருத்​தங்​கள் செய்து, புதிய மசோதா கொண்டு வரப்பட்டு இருக்கு.

5 ஆண்டுகள் சிறை

அதன்​படி வினாத்​தாள் கசி​வு குற்​ற​வாளி​களுக்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்​கப்​படும்.

10 ஆண்டு சிறை, 10 கோடி அபராதம்

குழு​வாக, கும்​பலாக முறை​கேட்​டில் ஈடு​படுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்​டனை​யும், ரூ.10 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.

வினாத்​தாள் கசி​வில் தொடர்​பு உடைய கல்வி நிறு​வனங்​களின் உரிமம் ரத்து செய்​யப்​பட்​டு, சீல் வைக்​கப்படும்.

அனைத்து முறைகேடுகளும் விசாரணை

நீட், ஜேஇஇ, கியூட் உள்​ளிட்ட நுழைவுத்தேர்​வு​கள், யுபிஎஸ்​சி, எஸ்​எஸ்சி போட்​டித் தேர்​வு​கள் தொடர்​பான வி​னாத்​தாள் கசிவு விவ​காரங்​கள் புதி​ய மசோ​தா​வின்​ கீழ்​ வி​சா​ரிக்​கப்​படும்​. இவ்​வாறு மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்துள்ளன.

இளைஞர்களுக்கு மோடி அழைப்பு

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இளைஞர்கள் அதிக நேரம் இருப்பது இன்ஸ்டாகிராமில்தான். எனவே, அரசின் திட்டங்களையும் அதன் வாயிலாகவே இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளை ‘ரீல்ஸ்’ ஆக தயாரித்து பதிவிடவேண்டும்’’ என்று அறிவுரை சொல்லி இருக்காரு.

விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என மோடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டத, ஒரே நாளில் அவரது கணக்கில் 10 லட்சம் புதிய ஃபாலோயர்கள் இணைஞ்சி இருக்காங்க.

நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகள்ள முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர இருக்கு. இதன் மூலம், மோசடிகள், மாணவர்களோட எதிர்காலம் பாதிக்கப்படுவது படிப்படியா முடிவுக்கு வரும். தேர்வுகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கு.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in