மகளிர் மசோதா தோல்வி : கொண்டாடி தீர்க்கும் எதிர்க்கட்சிகள் : 70 கோடி பெண்களுக்கு அவமானம்!, அமித் ஷா கண்டனம்...

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை எதிர்க்கட்சிகள் கொண்டாடுவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவமானம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Amit Shah condemned opposition parties' celebration of the defeat of Women's Bill, is an insult to every woman
Amit Shah condemned opposition parties' celebration of the defeat of Women's Bill, is an insult to every womanani twitter
1 min read

மக்களவையில் விவாதம்

How can anyone celebrate victory after deceiving half the country's population—700 million women—and losing their trust? : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன.

மசோதா தோல்வி

முடிவில் நடந்த வாக்கெடுப்பில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு 298 எம்பிக்கள் ஆதரவு தந்தனர். 230 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு அதாவது 352 எம்பிக்களின் ஆதரவு கிடைக்காததால், மசோதா தோல்வி அடைந்தது.

எதிர்க்கட்சிகள் கொண்டாட்டம்

மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி அடைந்ததை எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமித் ஷா கண்டனம்

இதனை கண்டித்து மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில், ” நாட்டின் பாதி மக்கள்தொகையான 70 கோடி பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

பெண்களின் நம்பிக்கை இழப்பு

அவர்களின் நம்பிக்கையை இழந்த பிறகு, ஒருவரால் எப்படி வெற்றியைக் கொண்டாட முடியும்?. எதிர்க்கட்சிகளின் இந்த கொண்டாட்டம். பல தசாப்தங்களாக தனது உரிமைகளுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண் ணுக்கும் ஒரு அவமானம்.

எதிர்க்கட்சிகள் துரோகம்

காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எத்தனை முறை பெண்களை காட்டிக் கொடுக்கும்? பல சமயங்களில், ஆணவத்தால் பிறக்கும் வெளித்தோற்ற வெற்றியின் மகிழ்ச்சி, உண்மையில், ஒரு மறைக்கப்பட்ட பெரும் தோல்வியாகும்.

இதை சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை”. இவ்வாறு அமித் ஷா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in