எலான் மஸ்க்கை சுட்டிகாட்டிய கிரண் ரிஜிஜூ : ராகுலுக்கு பதிலடி!

Minister Kiren Rijiju slams Rahul Gandhi : 'நம் நாட்டை இழிவுபடுத்த வேண்டாம். ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள்' என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
Union Minister Kiren Rijiju slams Rahul Gandhi for Blaming Constitutional Bodies To Mention Elon Musk Remarks in Tamil
Union Minister Kiren Rijiju slams Rahul Gandhi for Blaming Constitutional Bodies To Mention Elon Musk Remarks in TamilSource : SANSAD TVK
1 min read

மத்திய பட்ஜெட் குறித்து இண்டியா கூட்டணி கட்சிகளின் கருத்து

Minister Kiren Rijiju slams Rahul Gandhi : 2026-27ம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக ஞாயிறு கிழமையில், நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்று கூறி பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ராகுலும் தனது பங்கிற்கு சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உற்பத்தித்துறை சரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு பதிலடி கொடுத்த கிரண் ரிஜிஜு

அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உலகின் முன்னணி தொழிலதிபரின் கருத்தை மேற்கோள் காட்டி, பதிலடி கொடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; பொதுவாக நான் இந்தியர்கள் அல்லாதவர்களின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றியது கிடையாது. தற்போது ராகுலுக்கு உணர்த்துவதற்காகவே உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கருத்தை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது.

அரசை விமர்சிப்பது ஒரு ஜனநாயக உரிமை என்றாலும், நமது நாட்டை இழிவுபடுத்த வேண்டாம். இந்தியாவின் சாதனைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, உலகின் பொருளாதார பலம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா - சீனாவை நோக்கி நகர்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து அவர் பகிர்ந்த பட்டியலில் 26.6 சதவீத ஜிடிபியுடன் சீனா முதலிடத்திலும், 17 சதவீத ஜிடிபியுடன் இந்தியா 2வது இடத்தில் இருந்தது. 9.9 சதவீத ஜிடிபியுடன் அமெரிக்கா 3ம் இடத்தை பிடித்திருந்தது, என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in