

தனி நீதிபதி தீர்ப்பு சரியே - நீதிபதிகள் அமர்வு
"DMK has consistently berated, derided and attacked Sanatan Dharma": Piyush Goyal on HC's verdict on Deepathoon issue ; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் அமர்வு உத்தரவு
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அரசியல் நோக்கில் இந்த வழக்கு பார்க்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த போதே தீபம் ஏற்றி இருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.
கார்த்திகையில் தீபம் ஏற்ற உத்தரவு
தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீர்ப்பு மூலம் நீதி நிலைநாட்டம்
நீதிமன்றம் பிறப்பித்து இருக்கும் உத்தரவு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ” திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும், திமுகவின் மனநிலையைப் புரிந்து கொள்ள, நீதிபதிக்கு எதிராகக் கொண்டுவந்த தகுதி நீக்கத் தீர்மானமே உதாரணம்.
தமிழக அரசின் வாதம் நிராகரிப்பு
தீபத்தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது”
சனாதனத்திற்கு எதிராக திமுக
திருப்பரங்குன்றத் தீர்ப்பு பக்தர்களுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி.சனாதன தர்மத்திற்கு எதிராகவே தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் பேசி வருகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதுபோல செயல்படுகிறார்கள்” என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
==================