

மேற்கு ஆசியாவில் போர்மேகம்
ஈரான் - அமெரிக்கா போரால் மேற்கு ஆசிய பிராந்தியம் போர் மேகங்களால் சூழப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஜி தட்டுப்பாட்டால் பல்வேறு நாடுகள் தவிக்கின்றன. இந்தியாவும் இதன் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
அரபு அமீரகம் சென்ற பிரதமர்
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது, இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பெட்ரோலிய ஒப்பந்தங்கள்
அதில் முக்கியமானது எல்பிஜி என்று அழைக்கப்படும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் ஒப்பந்தம், இரண்டாவதாக அவசர தேவைக்காக இருப்பில் வைப்பதற்காக மிக பெரிய கிடங்குகளில் கச்சா பெட்ரோலியத்தை இருப்பு வைப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 5 பில்லியன் முதலீடு
இந்தியா உள்கட்டமைப்புகளுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தொடர்பான ஒப்பந்தம் மேலும் பாதுகாப்பு துறையிலே இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்றது.
சமீபத்தில் சவூதி அரேபியா பாகிஸ்தானுடன் இது போன்ற பாதுகாப்பை ஒப்பந்தத்தை செய்திருக்கிறது ஆகவே ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
கப்பல் பழுதுபார்க்கும் மையம்
இந்தியாவில் கப்பல் பழுதுபார்க்கும் மையங்களை குஜராத்தில் அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
போர் விமானங்கள் பாதுகாப்பு
முன்னதாக, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக வான்வெளியில் நுழைந்த போது ஐக்கிய அரபு அமீரகதின் F16 போர் விமானங்கள் அவரது விமானத்திற்கு பாதுகாப்பாக வானில் பறந்து வந்தன.
நெருங்கிய நல்லுறவு
ஈரான் போரினால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்திய பிரதமருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கூடுதல் பாதுகாப்பு அளித்து இந்தியாவுடனான நட்பை எந்த அளவிற்கு மதிக்கின்றது என்பதை இதன் மூலம் நிரூபித்து காட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை நிறைவு செய்த பிறகு, ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.
================