உலகின் முன்னணி பல்கலைகள்;இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள்

உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களின் பட்டியல் வெளியிட்டப்பட்ட நிலையில், இதில், 54 இந்திய பல்கலைகள் இடம் பிடித்துள்ளன.
உலகின் முன்னணி பல்கலைகள்;இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள்
https://x.com/iitmadras?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
1 min read

உலகளவில் தலைசிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூ.எஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2026ம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

500 பல்கலைக்கழகங்களை கொண்ட இந்தப் பட்டியலில், அமெரிக்காவின் மாசூசுட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) முதலிடம் பிடித்துள்ளது.

பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரி 2ம் இடத்தையும், அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலை 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலை 4வது இடத்தில் உள்ளது.

ஹார்வார்டு பல்கலை, கேம்பிரிட்ஜ் பல்கலை அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியலில், 54 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி டெல்லி ஐஐடி, 123வது இடத்திலும், ஐஐடி பாம்பே 129 இடத்திலும் உள்ளன.

சென்னை ஐஐடிக்கு 180வது இடம் கிடைத்து இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 465வது இடம் கிடைத்துள்ளது.

இதுபற்றி சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள பதிவில், உலக பல்கலை தரவரிசை பட்டியலில், 180வது இடத்திலும், இந்தியாவில் 3வது இடத்திலும் தாங்கள் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை, நமது முழு சமூகம், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பெருமையான தருணம்,என்றும் குறிப்பிட்டுள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in