
சாலையோர கடைகள், பெட்டிக் கடைகள், வணிக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய சிரமம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக சுலபமாக வேலை முடிகிறது. வணிகர்களும் தினமும் வங்கிக்கு சென்று பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமும் குறைந்து விட்டது.
அதேசமயம், நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அஞ்சல்
நிலையங்களில் இன்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் கொண்டு வரப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
இனி தபால் அலுவலகங்களில் யுபிஐ மூலமாக பணம் செலுத்தலாம்.
ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
====================