ஒரே நாளில் 70.7 கோடி பரிவர்த்தனை : புதிய உச்சம், UPI சாதனை

UPI Payment Transactions Per Day in India : இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மட்டும் ஒரே நாளில் 70.7 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளது.
UPI Payment Transactions Per Day in India
UPI Payment Transactions Per Day in India
1 min read

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை :

UPI Payment Transactions Per Day in India : இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனை(Digital Transaction) செயல்பாட்டிற்கு வந்து விட்டது. இதன்மூலம், எளிதில் பண பரிவரத்தனை நடைபெற்று, பொருட்களை வாங்க முடிகிறது. பணத்தை தூக்கிக் கொண்டு அலைய வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான அனுமதி இருந்தால், ஒரு இடத்தில் உட்கார்ந்து உலகின் எந்த முலைக்கும் பணம் அனுப்பலாம். பொருட்களை வாங்கலாம். இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது.

யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரிப்பு :

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய பாஜக அரசு பெரிய அளவில் ஊக்குவித்து வருவதே இதற்கு முக்கிய காரணம். 2023ம் ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது யுபிஐ பண பரிவர்த்தனையில் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது 35 கோடியாக இருந்த தினசரி பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 50 கோடியாக அதிகரித்தது. இப்போது அது 70 கோடியாக உயர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.

ஜூலையில் 65 கோடிக்கு பரிவர்த்தனை :

கடந்த ஜூலை மாதம் யுபிஐ-யில் தினசரி பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை 65 கோடியாக இருந்தது(UPI Transaction July 2025). இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் பிறந்ததும் பல்வேறு பயன்பாட்டு கட்டணங்கள், வாடகை, ஊதியம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொண்ட காரணத்தால் 70.7 கோடி பண பரிவர்த்தனை என்ற சாதனை 2ம் தேதி எட்டப்பட்டது. .

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயனாளர்கள் :

கூகுள் பே(Google Pay), போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகயின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

மேலும் படிக்க : ”யுபிஐ” பணப்பரிவர்த்தனை இந்தியா "டாப்" : சர்வதேச நிதியம் பாராட்டு

யுபிஐ பண பரிமாற்றம் - தொடர்ந்து உயர்வு :

யுபிஐ மூலம் ஒவ்வொரு மாதமும் 1,800 கோடி பண பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 32 சதவீதம் அதிகரிக்கிறது. யுபிஐ முறை இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி தள்ளியுள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்களில் நிதி உள்ளடக்கத்தில் முக்கிய அங்கமாக யுபிஐ மாறியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது. இதில் 49 கோடியே 10 லட்சம் பேரும், 6 கோடியே 50 லட்சம் வணிகர்களும், 675 வங்கிகளும் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in