UPSC Aspirants கவனத்திற்கு... : தேர்வு தேதி வெளியானது

UPSC Exam Date 2026 : யூபிஎஸ்சி 933 காலி பணியிடங்களுக்கு தேர்வு தேதியானது வெளியிடப்பட்டுள்ளது .மே 24 முதல் நிலைத் தேர்வு, பிப்ரவரி 24 விண்ணப்ப கடைசி நாள் என்றும் அறிவிப்பை வெளியிட்டள்ளது .
UPSC Exam Notification 2026 Announcement Check Exam Application Date Update in Tamil
UPSC Exam Notification 2026 Announcement Check Exam Application Date Update in TamilSource : UPSC Notification
1 min read

மத்திய தேர்வாணையம் வெளியீடு

UPSC Exam Date Notification 2026 : ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 933 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளருக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்

இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட 23 பிரிவுகளில் சுமார் 933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மே மாதம் முதல்நிலை தேர்வு

இந்த பணியிடங்களுக்கு வரும் மே 24 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வின் படிநிலைகள்

முதல் நிலைத் தேர்வு, Objective Type வினாக்கள் என்ற அடிப்படையிலும் இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

முதன்மைத் தேர்வை பெறுத்தவரை முன்பு உள்ளதுபோல எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்த யூபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பம் ஆர்வலர்கள் பிப்ரவரி 24 கடைசி நாள் என்றும் , தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் யூபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு மையம் ஒதுக்கீடு

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் முதற்கட்டத் தேர்வும் , சென்னையில் முதன்மை தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் விண்ணப்பிப்பவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்றும் யூபிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in