
இந்திய பொருட்களுக்கு 25% வரி :
US Tariff on India : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருவது, இந்திய பொருட்கள் அமெரிக்காவில் அதிக அளவில் விற்பனை ஆவது உள்ளிட்ட காரணங்களால், கடும் அதிருப்தியில் இருக்கிறார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டு நாளை முதல் அதை அமல்படுத்துகிறார்.
பொய்யான ட்ரம்ப் கணிப்பு :
இந்தியா மீது கூடுதலாக வரி விதித்தால் அந்நாட்டு பொருட்களை, இந்திய உற்பத்திகளை அமெரிக்கர்கள் வாங்குவதை குறைப்பார்கள் என்று ட்ரம்ப் கணக்கிட்டார். கூடுதல் வரி விதித்தால், இந்திய பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என அமெரிக்க மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது ட்ரம்பின் கணிப்பு.
அமெரிக்க மக்களை தாக்கும் விலை உயர்வு :
ஆனால் இந்த வரி விதிப்பால் அதிக பாதிப்புகளை சந்திக்க போவது அமெரிக்கர்கள்தான். "நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம்" என்ற அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டாலும், இந்தியாவில் இருந்து அமெரிக்க விற்பனையாளர் ஒருவர் ஒரு பொருளை இறக்குமதி செய்தால், அதற்கு 25% வரி விதிக்கப்படும். ஆனால் இதை இந்தியர்கள் கொடுக்க மாட்டார்கள். அதாவது பொருளை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனம் இந்த தொகையை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி என்றால் இறக்குமதி செய்யும் அமெரிக்கர்தான் இந்த வரியை கட்ட வேண்டி இருக்கும். அதாவது இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த செலவை ஏற்கும்.
மக்கள் தலையில் வரிச்சுமை :
கூடுதல் வரிவிதிப்பிற்கு ஆகும் செலவு பொருட்களின் விலையேற்றத்தில் போய் முடியும். அதை வாடிக்கையாளர் செலுத்த வேண்டி இருக்கும். உதாரணமாக, இந்திய விவசாய பொருள் ஒன்று அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டால், அதற்கான 25 வரி விதிப்பை கொள்முதல் செய்யும் நிறுவனம் முதலில் செலுத்தினாலும், விற்பனை செய்யப்படும் போது அந்தப் பொருளின் விலை குறைந்தபட்சம் 25 சதவீதம் அதிகரித்து இருக்கும்.
மேலும் படிக்க : இந்திய பொருட்களுக்கு ”25% வரி” : நாளை (ஆகஸ்டு.1) முதல் அமல்
இந்தியாவுக்கு பெரிய பாதிப்பில்லை :
ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து, பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்தியாவுக்கு எதிராக வரியை விதித்த ட்ரம்ப், பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறார். இதன் மூலம் பலன் அடையப் போவது பாகிஸ்தான் தான். அமெரிக்கர்கள் கிடையாது. உலகளாவில் சந்தை வரவேற்பு இந்தியாவுக்கு இருப்பதால், அமெரிக்கா இல்லா விட்டால், மற்ற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ள முடியும்.
======