
வரி விதிப்பில் டிரம்ப் கெடுபிடி :
Donald Trump on US Free Trade Agreement Deal : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து வரத்த கட்டமைப்பு என்ற பெயரில் வரி விதிப்பில் கெடுபிடி காட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு என்று தொடங்கிய அவர் அபராத வரி வரை விதித்து உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளார்.
நட்பு நாடுகளுக்கு வரி விலக்கு :
அதிகபட்சமாக பிரேசில், இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது(US Tariffs on India). இதற்கு அமெரிக்க மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சில வரி விலக்குகளை அளிக்கும் நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு இருக்கிறார்.
45 நாடுகளுக்கு 0% வரி மட்டுமே :
பிரிவு 232 தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பர வரிகளைக் குறைக்கும் வகையில், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 45-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு பூஜ்ஜிய இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது.
நாளை முதல் ( செப்.8 ) அமல் :
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கான இந்த வரி விலக்குகள் செப்டம்பர் 8 ( திங்கட்கிழமை ) தேதி முதல் அமலுக்கு வருகிறது.
“அமெரிக்காவில் இயற்கையாக உற்பத்தி செய்வோ முடியாத அல்லது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் உற்பத்தி செய்ய முடியாத பொருட்கள் மீது வரி விலக்குகள் அளிக்கப்படும்.” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : "சீனாவிடம் இந்தியா-ரஷ்யா”வை இழந்து விட்டோம்: புலம்பும் டிரம்ப்
சில விவசாய பொருட்கள், விமானங்கள் மற்றும் பாகங்கள், மருந்துகளில் பயன்படுத்த காப்புரிமை பெறாத பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கம், கிராஃபைட், பல்வேறு வகையான நிக்கல், மயக்க மருந்துக்கு பூஜ்ஜிய வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
===