
இந்தியா மீது 50% வரி விதிப்பு :
ரஷ்யாவுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்தி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்து நெருக்கடி கொடுத்தார். இந்தியா பணியாததால், இதை 50 சதவீதமாக உயர்த்தி சிக்கலை ஏற்படுத்தி உள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அமெரிக்காவில் 50 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
வர்த்தக்க பேச்சுவார்த்தை கிடையாது :
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், 50 சதவீத வரிவிதிப்புக்கு பிறகு இந்தியாவுடனாக வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித் அவர், “சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று திட்டவட்டமாக கூறினார்.
விவசாயிகள் நலன், மோடி திட்டவட்டம் :
100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது புதிய வரிவிகிதங்களை அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் இருந்து பால், பாலாடை கட்டி, நெய் ஆகியவற்றை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய விரும்புகிறார். இது இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
மரபணு மாற்ற பொருட்களுக்கு அனுமதியில்லை :
அமெரிக்காவில் இருந்து கோதுமை, சோயாபீன், சோளம், ஆப்பிள், திராட்சை, கொட்டை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் அனுமதி கோரப்பட்டு வருகிறது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
======