ராஜதந்திரத்தில் டிரம்ப் தோல்வி : கைகோர்த்த இந்தியா - சீனா - ரஷ்யா

இந்தியா மீது வரி போரை தொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ராஜதந்திர ரீதியாக பெரும் தோல்வியை எதிர்கொண்டு வருகிறார்.
US President Trump who launched a tariff war against India, is facing a major diplomatic defeat
US President Trump who launched a tariff war against India, is facing a major diplomatic defeat
3 min read

சர்ச்சை நாயகன் டிரம்ப் :

அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்றதில் இருந்து சர்ச்சை நாயகனாகவே இருந்து வருகிறார் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில் குடியேறியவர்கள் சர்ச்சை, விசா கெடுபிடி என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்த அவர், இறுதியாக பல்வேறு நாடுகள் மீது வரி என்ற பெயரில் வர்த்தக போரை நடத்தி வருகிறார்.

வரி விதிப்பு மூலம் சிக்கல் :

குறிப்பாக மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா மீது அவர் விதித்திருக்கும் வரி என்பது யாராலும் ஏற்க முடியாத ஒன்று. இதேபோன்று, பிரேசில் உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு அமெரிக்காவில் அந்நாட்டு பொருட்கள் விற்பனையை முடக்கி இருக்கிறது.

உலக அரசியலில் டிரம்ப் :

இஸ்ரேல் - ஈரான் சண்டை, இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் எல்லாம் தன்னால் தீர்க்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் டிரம்ப், ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார். 15 நாட்களில் போர் நிறுத்தம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் முத்தரபு பேச்சுவார்த்தைக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தியாவை சீண்டிய டிரம்ப் :

ஒருபுறம் உலக அமைதி, போர் இல்லாத சூழல் பற்றி பேசும் டிரம்ப், மறுபக்கம், வரி போர் மூலம் நாடுகளை அடிபணிய வைக்க முயற்சிப்பது, அவர் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்து இருக்கிறது. இந்தியாவை அவர் சீண்டி பார்த்தது ஒருவிதத்தில் நல்லதாகவே முடிந்து இருக்கிறது.

ரஷ்யா - இந்தியா நட்பு அதிகரிப்பு :

ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று, சீனாவுடனான பிணக்குகள் தீரும் காலம் கனிந்து வந்து இருக்கிறது. இம்மாத இறுதியில் அங்கு நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்கை அவர் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் மலர்ந்த இந்தியா - சீனா உறவு :

இதனிடையே, இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியையும் சந்தித்த அவர், இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

இந்தியா - சீனா உறவில் இது புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இதேபோன்று, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்று வந்ததும். பிரச்சினை என்றால் ஆசிய நாடுகள் கைகோர்த்து நிற்கும் என்பதை அமெரிக்காவுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியா சவால் :

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல, ரஷ்யாவையும், சீனாவையும் சீண்டி பார்க்கும் அமெரிக்காவை ஒரு கை பார்க்க இந்தியா தயாராகி விட்டதை இது எடுத்துக் காட்டுகிறது. முந்தைய காங்கிரஸ் அரசாக இருந்தால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து போயிருக்கும். ஆனால், 140 கோடி மக்களின் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி, எந்தக் காலத்திலும் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயந்து பின்வாங்க மாட்டார்.

பிரிக்ஸ் நாடுகள், இந்திய ரூபாய் :

வரும் காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் இடையே நடக்கும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரை தவிர்த்து இந்திய ரூபாயை பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. இது சாத்தியமானால், இந்திய பொருளாதாரத்தின் அபரிதமான வளர்ச்சியை அமெரிக்க போன்ற எந்த வல்லரசு நாடும் தடுக்கவே முடியாது.

டிரம்ப் மீது அமெரிக்கர்கள் கோபம் :

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தால், அவற்றை மற்ற நாடுகளில் சந்தைப்படுத்தி விற்க அவர் தயாராக இருக்கிறார். இதனால், அமெரிக்காவுக்கு தான் இழப்பு, இந்தியாவுக்கு கிடையாது. கூடுதல் வரி விதிப்பால் அமெரிக்க கடைகளில் இந்திய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவற்றை வாங்க முடியாதவர்கள் தங்கள் கோபத்தை டிரம்ப் மீதுதான் காட்டுவார்கள்.

ஆட்டம் காணும் அமெரிக்கா :

காலப் போக்கில் இதன் பாதிப்பு, அமெரிக்க பொருளாதாரத்தையே அசைத்து பார்க்கலாம். இந்த விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே உஷாராகி, அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை கைகழுவ தொடங்கி விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம், இந்திய பொருட்களே பயன்படுத்துவோம் என்ற முழக்கம் உரக்க ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் டிரம்பின் செயல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீரழிக்க தொடங்கி விட்டது. வரும் ஆண்டுகளில் இதன் பாதிப்பு, மக்களை நசுக்கும். அது டிரம்புக்கு எதிராக திரும்பும்.

இந்தியாவுக்கு சந்தை வாய்ப்பு :

அதேசமயம், ஆசிய நாடுகளிடையே ஏற்பட்டு வரும் நல்லிணக்கம், இந்தியாவுக்கு பெரிய சந்தையை திறந்து விடும். குறிப்பாக சீனாவுடனான பழைய உறவு என்பது நமது பலத்தை பல மடங்கு அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா பக்கம் பாகிஸ்தானும், வங்கதேசமும் நின்றாலும், அவர்களால் ஆசிய நாடுகளுக்கு பெரிய பலன்கள் எதுவும் கிடைக்க போவதில்லை. கச்ச எண்ணெய் விற்பனை நாடுகளும் இந்தியாவை ஆதரிப்பதேயே விரும்புகின்றன. இதன்மூலம் எல்லா பக்கமும், டிரம்புக்கு நெருக்கடி தான். ஒரு கட்டத்தில் மீளவே முடியாத நிலையில் சிக்கி அவர் திணறப் போகிறார்.

இந்தியாவை வளர்த்து விடும் டிரம்ப் :

இந்தியா - சீனா நல்லுறவு வலுப்பெறுவது ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் மற்றொரு பகையாளியான ஈரானிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பையும் உருவாக்கி தந்து இருக்கிறார் டொனால்டு டிரம்ப்.

டிரம்பிற்கு நோபல் பரிசு? :

சண்டைகளை நிறுத்தி அமைதிக்கான நோபல் பரிசு பெற பேராசைப்படும் அதிபர் டிரம்ப், வர்த்தக போர் மூலம் தனது நாட்டு மக்களை அவதிப்பட வைக்க போகிறார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப்போவதை யாராலும் தடுக்க முடியாது. அதேசமயம், அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து, அதிபர் டிரம்ப் நமக்கு தேவையா என அந்நாட்டு மக்கள் நினைப்பதையும் தவிர்க்கவே முடியாது. மோசமான அதிபருக்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், அது டிரம்புக்கு கிடைக்கலாம், அமைதிக்கான நோபல் பரிசுக்கு வாய்ப்பே இல்லை.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in