US reduces tariffs on India to 18 percent
US reduces tariffs on India to 18 percent Source : Google

USA இந்திய பொருட்கள் மீது வரி குறைப்பு : அமைச்சர்கள் வரவேற்பு

US reduces tariffs on India : இந்தியா மீதான வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைந்துள்ளது. .மத்திய அமைச்சர்கள் பலரும் இதனை வரவேற்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .
Published on

அமைச்சர்களின் கருத்து

US reduces tariffs on India : இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ,ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்தனர் .

மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல்

முதலில் இதனை நடைமுறைபடுத்தியததற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் , அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த வரி குறைப்பு இந்திய அமெரிக்க உறவை வலுப்படுத்தும் என்றும் , வளர்ச்சி மற்றும் அமைதிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார் .

இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டும் அல்லாது ,2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு முன்னோக்கிய வளர்ச்சி பாதைக்கு எட்டு செல்லும் என்று தெரிவித்தார் .

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் ஒரு பொன்னான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளின் மக்களும், தொழில்துறையினரும் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும் இந்த இரு கூட்டாளி நாடுகளும் இணைத்து ஒரு முன்னேறிய வளர்ச்சி பாதைக்கு எட்டு செல்லும் என்று தெரிவித்தார் .

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

வரிகளை கணிசமாக குறைத்து இரு நாடுகளுக்கிடையியே உறவை வலுப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் , அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அமெரிக்க பொருளாதாரத்தில் வளர்ச்சியை காண முடியும் என்று தெரிவித்தார் .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு இது ஒரு முக்கியமான பரஸ்பர வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது நமது உறவை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பெரும் பயனளிக்கும்.

இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகம் மேலும் செழிக்க இது ஒரு அடித்தளமாக அமையும் என்றும் கூறினார் .

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் குறித்த அறிவிப்புகளை வரவேற்பதாகவும் , இது இரு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும்

வளர்ச்சி மற்றும் மேக் இன் இந்தியா முயற்சிகளை வலுப்படுத்தி, நம்பகமான தொழில்நுட்ப உறவுகளை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது இது இரு நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் பெறுவதாகவும் அமைகின்றது என்று தெரிவித்தார் .

logo
Thamizh Alai
www.thamizhalai.in