

விண்வெளியில் சாதிக்கும் இந்தியா
The BlueBird-6 satellite has been successfully placed into its targeted Low Earth Orbit, VM3-M6 mission is sucessful : விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை செலுத்துவதில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் இந்தியா, வணிக ரீதியாகவும் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. இதற்கு தேவைப்படும் ராக்கெட்டுகளை இந்தியாவே வடிவமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
BlueBird செயற்கைக்கோள்
அமெரிக்காவின் புதிய தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோள் BlueBird 6,100 கிலோ எடையுள்ள இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள், LVM3 ஏவுதள வரலாற்றில், குறைந்த புவி சுற்றுவட்டப்பாதையில் (LEO) வைக்கப்படும் மிகப்பெரிய செயற்கைக்கோள்.
LVM3 ராக்கெட்
இதற்கு முன்பு இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட மிகவும் கனமான செயற்கைகோள் என்றால், LVM3 ராக்கெட் மூலம் கடைசியாக விண்ணில் செலுத்தப்பட்ட தொலைதொடர்பு செயற்கைக்கோள் 03. இது சுமார் 4,400 கிலோ எடை கொண்டது. நவம்பர் 2 ஆம் தேதி இஸ்ரோவால் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் (GTO) அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட AST ஸ்பேஸ்மொபைல் (AST மற்றும் அறிவியல், LLC) இடையே கையெழுத்தான வணிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புளூபேர்ட்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது.
கனமான செயற்கைக்கோள்
அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.
விண்ணில் வெற்றிப் பயணம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து LVM3-M6 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இன்று காலை 8.54 மணிக்கு விண்வெளி நிலையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, இஸ்ரோவின் கனரக லிஃப்ட் ஏவுதளமான LVM3-M6 ராக்கெட் மூலம் ப்ளூபேர்ட் ப்ளாக்-2 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
டவர்களே இல்லாமல் சிக்னல்
உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக அதிவேக இணைப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் ப்ளாக் 2, AST ஸ்பேஸ்மொபைல் முதல் மற்றும் ஒரே விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை உருவாக்குகிறது. இது ஸ்மார்ட்போன்கள் மூலம் நேரடியாக அணுகக்கூடியது மற்றும் வணிக மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ப்ளூபேர்ட் பிளாக்-2 செயல்பாடு
ப்ளூபேர்ட் பிளாக்-2 பணி என்னவென்றால், செயற்கைக்கோள் மூலம் நேரடி-மொபைல் இணைப்பை வழங்குவதற்கான உலகளாவிய குறைந்த புவி சுற்றுவட்டப்பாதை தொகுப்பின் ஒரு பகுதியாகும். இந்த தொகுப்பு 4G மற்றும் 5G குரல் மற்றும் வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்திகள், ஸ்ட்ரீமிங் மற்றும் தரவு ஆகியவற்றை அனைவருக்கும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் செயல்படுத்தும்.
இது பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில், சுமார் 600 கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட மிகப்பெரிய வணிக தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக செயல்பட உள்ளது.
பாகுபலி ராக்கெட்
இந்தியாவின் 43.5 மீட்டர் உயரமுள்ள LVM3, ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹைக்கிள் (GSLV) Mk III என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட க்ரையோஜெனிக் இயந்திரத்துடன் கூடிய மூன்று நிலை ராக்கெட் ஆகும்.
இது இரண்டு S200 திட ராக்கெட் பூஸ்டர்களைப் பயன்படுத்தி லிஃப்ட் ஆஃப் செய்வதற்குத் தேவையான பெரிய அளவிலான உந்துவிசையை வழங்குகிறது. இந்த பூஸ்டரை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கியுள்ளது.
சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தம்
ஏவப்பட்டதிலிருந்து சுமார் 15 நிமிடங்கள் பறந்த பிறகு, ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் ராக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, புவி சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. கனமான செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் காரணமாக LVM3 ராக்கெட் இந்தியாவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது.
=================