

கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் டிரம்ப் எச்சரிக்கை :
இது குறித்து டிரம்ப் கூறுகையில் ஓமன் இந்த ஹார்முஸ் நீரினை விவகாரத்தில் தலையிடும்பட்சத்தில் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்கநேரிடும் எனவும் அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் இந்த விவகாரத்தில் அவர்கள் ஏதேனும் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்தால் நேராக அவர்கள் மீது எந்த ஒரு யோசனையும் இன்றி குண்டு மழை பொழியப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
டிரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் :
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து ஈரானும் ஓமானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று கூறிய அதேவேளையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) வாஷிங்டன் ஒரு நேரடித் தொடர்பு வழியை ஏற்படுத்தியுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஓமனுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை :
ஓமான் குறுக்கிட்டால், அவர்களை குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம்," என ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.
அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை தொடர்பான ராஜதந்திர முயற்சிகள் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் வேளையில், அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
அந்த நீர்வழிப்பாதை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஏற்பாடுகள் குறித்து ஈரான் ஓமானுடன் விவாதித்து வரும் வேளையில், வாஷிங்டன் தனது சொந்த அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.
டிரம்ப் அறிவித்த முக்கிய அறிவிப்பு :
ஐ.ஆர்.ஜி.சி-யுடன் அமெரிக்கா ஒரு நேரடி மறைமுகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். இந்த தொடர்புகளை உறுதிப்படுத்திய போதிலும், மோதலை தீர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நோக்கி தாம் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் சிறந்த போக்கர் ஆட்டக்காரர்கள், ஆனால் அவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்," என்று ஐ.ஆர்.ஜி.சி. குறித்து கூறிய ட்ரம்ப், தனக்கு "கால அட்டவணை எதுவும் இல்லை" என்றும், "அவசரப்படவில்லை" என்றும் கூறினார்.
எதிரி விமானங்களுக்கு மரண அடி? 200 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி தகவல் :
இதற்கிடையே, ஐ.ஆர்.ஜி.சி-யின் துணை தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முஸ்தபா இசாதி, மோதல் தொடங்கியதிலிருந்து ஈரான் 200-க்கும் மேற்பட்ட “எதிரி விமானங்களை” சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளார்.
இந்த மோதலை ஒரு “கலப்பினப் போர்” என்று விவரித்த இசாதி, ராணுவ நடவடிக்கை மற்றும் உள்நாட்டு அழுத்தம் ஆகிய இரண்டின் மூலமும் நாட்டை சீர்குலைக்க ஈரானின் எதிரிகள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.