

பிப்ரவரியில் சட்டசபை தேர்தல்?
403 எம்எல்ஏக்களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வாக்கில் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2 முறை ஆட்சியில் இருக்கும் பாஜக, மீண்டும் அரியணை ஏறும் உத்வேகத்துடன் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி
அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
2022ல் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் கடந்த முறை இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படி இருக்கையில் இந்தமுறை காங்கிரஸ் 181 தொகுதிகளை கேட்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் கேட்டது 130 தொகுதிகள்
தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு 130 இடங்களை காங்கிரஸ் கோரியது. ஆனால் 26 இடங்களை மட்டுமே தர முடியும் என சமாஜ்வாதி பிடிவாதமாக நிற்கிறது.
சமாஜ்வாதி ஒதுக்கியது 26 இடங்கள்
அதாவது காங்கிரஸ் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில், கடந்த முறை 2வது இடம் பிடித்த 4 தொகுதிகள் இவற்றோட சேர்த்து 26 சீட்கள் தான் என்பதில் அகிலேஷ் உறுதியாக உள்ளார்.
பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், கூட்டணி முறிவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.
காங்கிரசுக்கு அகிலேஷ் அட்வைஸ்
இதனிடையே லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தலில் வெற்றி பெறவே கூட்டணி அமைக்கப்படுவதாகவும், எதிரிகளை வீழ்த்தும் வகையில் கூட்டணி கட்சிகள் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றார்.
2022 கள நிலவரம்
403 எம்எல்ஏ-க்களை கொண்டுள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி 125 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
இதற்கிடையே, 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் விவரங்களை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் நிலையில் முதல் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
======