Vaibav suryavanshi: U19-ல் வெறும் ரூ.20,000 சம்பளம்... இப்போது எவ்வளவு தெரியுமா?

Vaibav suryavanshi: U19 முதல் இந்திய அணி வரை.. சூர்யவன்ஷியின் சம்பளம் விவரம்...!
Vaibav Suryavanshi: From U-19 to the Indian team... Details of Suryavanshi's salary...!
Vaibav Suryavanshi: From U-19 to the Indian team... Details of Suryavanshi's salary...!source: google
2 min read

Vaibav Suryavanshi: From U-19 to the Indian team... Details of Suryavanshi's salary...!

இந்திய அணியில் சூர்யவன்ஷி

இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் டி20 அணியில் தேர்வு. பிசிசிஐ-ன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான சம்பள விவரங்கள் மற்றும் U-19 ஒப்பிடு குறித்த முழு விவரம்.

சூர்யவன்ஷி சாதனை

15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் அணியில் இடம்பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான பேட்டிங் திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்த இந்த இளம் பேட்ஸ்மேன், தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதிக்க தயாராகி வருகிறார்.

தேசிய அணியில் வைபவ் சூர்யவன்ஷி க்கு கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பு, அவரது விளையாட்டு வாழ்க்கையில் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையவுள்ளது.

டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வைபவ்: போட்டி ஊதியம் எவ்வளவு?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி, தேசிய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் போட்டி ஊதியம் தனித்தனியாக வழங்கப்படும். மத்திய ஒப்பந்தம் மற்றும் இதர ஊக்கத்தொகைகள் தவிர்த்து இந்தத் தொகை வீரர்களுக்குச் செலுத்தப்படுகிறது.

ஒரு டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் ஊதியம்

தற்போது வைபவ் சூர்யவன்ஷி டி20 சர்வதேசப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவர் இறுதிப் போட்டிக்கான லெவனில் இடம்பிடித்து விளையாடும் பட்சத்தில், ஒரு டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் ஊதியமாகப் பெறுவார். அவரது சர்வதேச வருமானம் இந்த மட்டத்திலிருந்தே ஆரம்பமாகிறது.

ஒருநாள் போட்டிகளில் இரட்டிப்பாகும் வருமானம்!

இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையைத் தொடர்ந்து நிரூபிக்கும் பட்சத்தில், விரைவில் இந்திய ஒருநாள் அணியிலும் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பிசிசிஐ-ன் தற்போதைய ஊதியக் கொள்கையின்படி, இந்திய வீரர் ஒருவருக்கு ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம் வழங்கப்படுகிறது. இது டி20 போட்டிக்கு வழங்கப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் நுழையும் போது அவரது வருமானம் மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்: உச்சகட்ட சம்பளம்

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் வடிவமே மிகவும் மதிப்புமிக்கதாகவும், சவாலானதாகவும் கருதப்படுகிறது. அதே சமயம், இந்த போட்டியில் விளையாடும் வீரர்களுக்குத்தான் பிசிசிஐ மிக அதிகபட்ச போட்டி ஊதியத்தை வழங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரூ.15லட்சம்

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் ஒரு வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் அணியில் கால்பதித்தால், அவர் தற்போது டி20-ல் பெறும் தொகையை விட ஐந்து மடங்கு அதிக ஊதியத்தைப் பெறும் அரிய வாய்ப்பு சூர்யவன்ஷிக்கு கிடைக்கும்.

U-19 அணியை விட 15 மடங்கு கூடுதல் சம்பளம் !

சமீப காலம் வரை வைபவ் சூர்யவன்ஷி இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மட்டத்தில் விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ தினசரி படியாக சுமார் 20,000 ரூபாய் வழங்கி வந்தது.

ஆனால், தற்போது அவர் சீனியர் இந்திய அணியில் இணைந்துள்ளதால், அவரது வருமான மதிப்பு எகிறியுள்ளது. அவர் விளையாடும் ஒரேயொரு டி20 போட்டி மூலம் ரூ. 3 லட்சம் சம்பாதிக்க முடியும் என்பதால், U-19 மட்டத்தோடு ஒப்பிடுகையில் அவரது போட்டி வருமானம் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகரித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளுக்கு சவால்?

மிக இளம் வயதிலேயே ஐபிஎல் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் ஜொலித்த வைபவ், தற்போது இந்திய அணியில் நுழைந்து தனது அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் படைத்த சாதனைகளை நினைவுபடுத்தும் வகையில் வைபவின் இந்த அசுர வளர்ச்சி அமைந்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷியின் இலக்கு

அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்வதே இந்த இளம் வீரரின் தற்போதைய இலக்காகும். அது சாத்தியப்பட்டால், அவரது வருமானம் மட்டுமின்றி, உலக கிரிக்கெட்டில் அவரது அந்தஸ்தும் பன்மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in