கேரள முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்பு - ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்பு!

கேரள முதல்வராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக்கொண்டார்
V.D. Satheesan takes oath as Kerala Chief Minister - Rahul, Priyanka and others attend
V.D. Satheesan takes oath as Kerala Chief Minister - Rahul, Priyanka and others attend google
1 min read

கேரளத்தின் புதிய முதல்வராக பதிவியேற்பு

கேரள மாநிலத்தின் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன் பதவியேற்று கொண்டார் .அவரோடு சேர்த்து 20 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

அளுநர் பதவி பிரமாண்ம் செய்து வைத்தார்

திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று காலை 10.15 மணி அளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து

கேரளத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மற்ற அமைசர்களும் பதுவியேற்றுக்கொண்டனர்

கேரள முதல்வர் வி.டி.சதீசன் உடன் காங்கிரஸ் கட்சியின் 11 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ,கூட்டணி கட்சியான ஐயூஎம்எல் கட்சியின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள்,

ஆர்எஸ்பி, சிஎம்பி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர் இவர்களில் 14 பேர் புதியவர்கள் என்பது குறிபிடதக்கக்து

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

கேரள முதல்வரின் பங்கேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அகியோர் பதுவியேற்றுக்கொண்டனர்

இதர தலைவர்களும் பங்கேற்ப்பு

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் ,இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில பாஜக எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in