தமிழக மீனவர்கள் பிரச்னை, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு: இலங்கை அதிபரிடம், துணை ஜனாதிபதி சிபிஆர். வலியுறுத்தல்!

அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ள துணை குடியரசு தலைவர் மீனவர் சம்மந்தபட்ட விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையிலே அணுக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
Vice President on official visit to Sri Lanka
Vice President on official visit to Sri Lankagoogle
1 min read

அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ள குடியரசு தலைவர்

இரண்டு நாள் அரசுமுரி பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியாவின் துணை குடியரசு தலைவரை கொழும்பு விமான நிலையத்தில், அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே வரவேற்றார்.

அந்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்திய -இலங்கை , இரு தலைவர்கள் முக்கிய ஆலோசனை

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை சந்தித்து பேசினார் ,அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை

மத்திய அரசின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இந்த சந்திப்பின் போது மீண்டும் உறுதியாக வெளிப்படுத்தினார்

மேலும் .டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, மத்திய அரசு சார்பில் 3,800 கோடி ரூபாய் நிதியுதவி சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரதமருடனான சந்திப்பு

அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள துணை குடியரசு தலைவருக்கு, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, கொழும்புவில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லமான 'டெம்பிள் ட்ரீஸ்-'ல் மதிய விருந்து அளித்து உபசரித்தார்.

அப்போது இரு தலைவர்களும், இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்டதுடன், மக்களுக்கு இடையிலான பிணைப்புகள் உள்ளிட்ட உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதம் செய்தனர்.

மத்திய அரசு உதவிகளை மக்களுக்கு சமர்ப்பணம் செய்த துணை குடியரசு தலைவர்

மத்திய அரசின் உதவியுடன் தமிழ் சமூகத்தினருக்கு கட்டப்பட்ட வீடுகளை, பயனாளிகளிடம் அவர் காணொளி வாயிலாக அந்நாட்டு மக்களுக்கு ஒப்படைத்தார்.

இதன் மூலம், அங்குள்ள தமிழ் சமூகத்தினருக்கான வீடுகளின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், மேலும் 10,000 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருவதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை அரசு முறை பயணம்

கடந்த 26 ஆண்டுகளில், இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு அரசு முறை பயணம் சென்றது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது

=============.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in