V.P. Election 2025 : இந்தியா கூட்டணி வேட்பாளர் ’சுதர்சன் ரெட்டி’

B Sudershan Reddy Vice President Candidate 2025 : துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
C P Radhakrishnan vs B Sudershan Reddy Vice President Candidate 2025 List
C P Radhakrishnan vs B Sudershan Reddy Vice President Candidate 2025 List
2 min read

துணை ஜனாதிபதி தேர்தல் :

B Sudershan Reddy Vice President Candidate 2025 : துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர், கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்தலுக்கான பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

என்டிஏ வேட்பாளர் ‘சி.பி. ராதாகிருஷ்ணன் :

அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் (21ம் தேதி) கடைசி நாளாகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அவர் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்கிறார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி :

துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணனை(CP Radhakrishnan NDA Candidate) ஒரு மனதாக தேர்வு செய்ய பாஜக முனைப்பு காட்டியது. இருப்பினும் போட்டி வேட்பாளரை நிறுத்துவதில் இந்தியா கூட்டணியும் ஆர்வம் காட்டியது. இதையடுத்து டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

துணை ஜனாதிபதி தேர்தல், போட்டி உறுதி :

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நீதிபதி சுதர்சன் ரெட்டி(Judge B. Sudarshan Reddy), ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், அசாம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியில் இருந்தவர் சுதர்சன் ரெட்டி. இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சியும் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (21ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

செப்.9ம் தேதி தேர்தல் :

துணை ஜனாதிபதி தேர்தலில் இருவர் போட்டியிடுவதால், தேர்தல் நடைபெறுவது உறுதியாகி விட்டது. அதன்படி, செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்(Vice President Election 2025 Date) நடைபெற இருக்கிறது. அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு வெளியாகும்.

மேலும் படிக்க : Vice President Election 2025: NDA வேட்பாளர் ’சி.பி. ராதாகிருஷ்ணன்’

தற்போதைய சூழலில் ராஜ்யசபாவில் 6 காலியிடங்களை தவிர்த்து, 12 நியமன எம்பிக்கள் உட்பட, 239 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மக்களவையில் ஒரு காலியிடத்தை தவிர்த்து, 542 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 782 பேர் ஓட்டுகள் உள்ளன. வெற்றிக்கு, 392 ஓட்டுகள் தேவைப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, லோக்சபாவில் 293, ராஜ்யசபாவில் 130 எம்பிக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு, லோக்சபாவில் 234 பேரும், ராஜ்யசபாவில் 79 எம்பிக்களும் உள்ளனர். பாஜக கூட்டணிக்கு 423 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in