புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
Puducherry Assembly Election 2026 : புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ,வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் ,இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்
ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கீடு ;திருமா அதிருப்தி
புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்
இந்தியா கூட்டணியில் காங்.,-தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் ,பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வி.சி.க.,வுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கபட்டது.
3 தொகுதிகளில் தனித்து போட்டி
தொகுதி பங்கீட்டில் விசிக விற்கு உடன்பாடு எட்டாத நிலையில் 3 தொகுதிகளில் தங்கள் கட்சி தனித்துப்போட்டியிடும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தனித்து போட்டியிடும் தொகுதி
புதுச்சேரியில் விசிக ஊசுடு ,நெட்டப்பாக்கம்,உழவர்கரை ஆகிய இடங்களில் தனித்து போட்டியிட்டு என்று தெரிவித்துள்ளது.
போட்டியிடாத தொகுதியிலும் ஆதரவு அளிக்கப்படும்
நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.