மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு : திரிணாமூல் கோட்டையில் பாஜக! : ”மம்தாவுடன் மோதும் சுவேந்து அதிகாரி”

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Voting is underway in West Bengal in the 142 constituencies
Voting is underway in West Bengal in the 142 constituenciesANI twitter
2 min read

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்

294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 152 தொகுதிகளில் கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

2ம் கட்ட தேர்தல்

இதைத் தொடர்ந்து மீதமுள்ள 142 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது.

திரிணாமூல் கோட்டையில் வாக்குப்பதிவு

முதல்கட்ட தேர்தல் வடக்கு வங்கம் மற்றும் அதை ஒட்டி மாவட்டங்களில் நடந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான கொல்கத்தா, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், நாடியா, ஹூக்ளி மற்றும் பூர்பா பர்தமான ஆகிய தெற்கு வங்க மாவட்டங்களில் நடக்கிறது.

2021ல் திரிணாமூல் ஆதிக்கம்

2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 142 தொகுதிகளில் 123 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக வெறும் 18 இடங்களில் மட்டும் வென்றது. ஐஎஸ்எப் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது.

மம்தாவுக்கு கைகொடுத்த தொகுதிகள்

கடந்த தேர்தலில் பாஜகவின் வளர்ச்சி வலுவாக இருந்த போதிலும், தெற்கு வங்கப் பகுதியில் திரிணாமுல் காங்கிரசின் அசுர வெற்றி தான் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது.

எனவே இம்முறையும் திரிணாமுல் காங்கிரஸ் 4வது முறையாக ஆட்சியை கைப்பற்ற இன்றைய 2ம் கட்ட தேர்தல் நடக்கும் 142 தொகுதிகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

பாஜகவுக்கும் முக்கியமான தேர்தல்

மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாஜகவுக்கும் 2ம் கட்ட தேர்தல் மிக முக்கியமாக இருப்பதால், திரிணாமுல் காங்கிரசின் கோட்டையை தகர்க்க பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

மம்தாவின் பவானிபூர் தொகுதி

இதுமட்டுமின்றி, 2ம் கட்ட தேர்தலில் உச்ச கட்ட மோதல் நிலவும் தொகுதியாக மம்தா பானர்ஜியின் பவானிபூர் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா vs சுவேந்து அதிகாரி

இங்கு, மம்தாவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தார். அ

தன்பின், பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.

பதிலடி கொடுப்பாரா மம்தா

எனவே நந்திகிராம் தோல்விக்கு பதிலடி தர இம்முறை மம்தா பானர்ஜி பவானிபூரில் கடுமையான பிரசாரங்கள் செய்துள்ளார்.

இங்கு அவரது வெற்றி, கவுரவ பிரச்னையாகவும் மாறியிருக்கிறது. பவானிபூரில் எஸ்ஐஆர் மூலம் 51,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது அத்தொகுதியில் 25 சதவீத வாக்குகள் ஆகும்.

துணை ராணுவம் குவிப்பு

முதல்கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. எனவே இம்முறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய படையினர் அனைத்து தொகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மே 4ல் வாக்கு எண்ணிக்கை

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுடன் இன்றோடு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இன்று மாலை கருத்துக் கணிப்பு முடிவு

இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக இருக்கின்றன. 5 மாநிலங்களிலும் அடுத்த ஆட்சி யாருடையது என்பது ஓரளவு தெரிந்து விடும்.

=========

logo
Thamizh Alai
www.thamizhalai.in