ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் விபி ஜி ராம் ஜி திட்டம் : ”100 அதிகாரிகள் நியமனம், ரூ.95,692 கோடி ஒதுக்கீடு”.

100 நாள் வேலை திட்டத்திற்கு பதில் 125 நாள் வேலை வழங்கும் விபி ஜி ராம் ஜி திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
VP G-Ram G scheme to be implemented nationwide; comes into effect on July 1; 100 officials appointed.
VP G-Ram G scheme to be implemented nationwide; comes into effect on July 1; 100 officials appointed. google
1 min read

ஒப்புதல் வழங்கிய குடியரசு தலைவர்

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா எனப்படும் விபி ஜி ராம் ஜி (VB—G RAM G) மசோதா 2025-க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார்

ஜீலை 1 முதல் அமலுக்கு வரும் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய ஊரக வளர்ச்சி துறை தலைவர் தெரிவித்துள்ளதுப்படி

புதிய விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்றும், இது தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (MGNREGA) விதிமுறைகளை படிப்படியாக மாற்றியமைக்கும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

100க்கும் மேற்ப்பட்ட அமைச்சர்கள் நியமனம்

இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பகுதி அதிகாரிகளை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கவுள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பங்காக ரூ. 95,692 கோடி இடைக்கால ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மாநிலங்களுக்கான திட்டத்தையும் அறிவித்த ஒன்றிய அரசு

அதே வேளையில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஏற்கனவே செய்துள்ளது . குறிப்பாக 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விபி ஜி ராம் ஜி திட்ட கட்டமைப்பின் கீழ் தங்கள் மாநிலத் திட்டங்களை அறிவித்துள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய வேளாணத்துறை அமைச்சர்

இந்த புதிய திட்டமானது கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கும் என்றும் இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும் வரை பழைய பெயரிலே தொடரும் என்றும் , இந்த புதிய திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்பினை உறுதி செய்வதே என்றும் தெரிவித்திருந்தார்.

======================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in