"மாணவர் தலைவர் to கேரள முதல்வர்" : தலைமையால் "தவிர்க்க முடியாத ஆளுமை வி.டி.சதீசன்!" : 19ல் முதல்வராக பொறுப்பேற்பு...

மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்க்கை தொடங்கிய வி.டி. சதீசன், கேரள முதல்வராக வரும் 19ம் தேதி பதவியேற்க உள்ளார்.
V.T. Satheesan, started his political career as student leader,o take oath as CM of Kerala on 19th
V.T. Satheesan, started his political career as student leader,o take oath as CM of Kerala on 19thgoogle
1 min read

வி.டி. சதீசன்

1964ம் ஆண்டு மே 31ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் நெட்டூரில் வடச்சேரி தாமோதர மேனன்- விலாசினிக்கு மகனாக பிறந்தவர் சதீசன். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, தேவாரா சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் பட்டப்படிப்பையும், ராஜகிரி கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.

சட்டம் பயின்றார்

அதனைத் தொடர்ந்து கேரள சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி மற்றும் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.எம் பட்டங்களைப் பெற்றார்.

10 ஆண்டுகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் சதீசன். வடச்சேரி தாமோதரன் சதீசன் என்பதையே வி.டி.சதீசன் என அழைக்கிறார்கள் கேரள மக்கள்.

மாணவர் தலைவராக...

எர்ணாகுளத்தில் மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, பறவூர் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்

2001ம் ஆண்டு முதல்முறை எம்எல்ஏவாக ஆன இவர், கடந்த முறை, பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டார்.

தேடிவந்த பதவி

கேரள காங்கிரசை சிறப்பாக வழிநடத்திய சதீசன், 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியை பிடிக்க ராகுலின் தளபதியாய் பணியாற்றினார்.

இவரது சிறப்பான செயல்பாடே, முதல்வர் பதவி என்ற பரிசு கிடைக்க காரணமாக இருந்தது.

61 வயதில் முதலமைச்சர்

முதல்வர் போட்டிக்கான களத்தில் மூன்று பேர் இருந்தாலும், கட்சி தலைமையால் நிராகரிக்க முடியாத தலைவராக உயர்ந்து நின்றார் சதீசன். அந்த வகையில், முதன்முறையாக ​61 வயதில் கேரள முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கப் போகிறார் அவர்.

பறவூர் தொகுதியின் முகம்

பறவூர் சட்டமன்ற தொகுதியை வி.டி.சதீசனின் கோட்டை என்றே கூறலாம். ஆறு முறை இங்கிருந்து சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

நான்கு முறை எம்எல்ஏ, ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவர், இந்தமுறை முதல்வர் என சதீசனை உயர்த்தி அழகு பார்த்து இருக்கிறது பறவூர் தொகுதி.

30 ஆண்டுகளாக மக்கள் பணி

30 ஆண்டுகளில் பறவூர் தொகுதி வாக்காளர்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட மக்கள் பிரதிநிதியாக சதீசன் திகழ்ந்து வருகிறார்.

எனவே, தொகுதியில் அனைவரும் அறிந்த, எளிதில் அணுகக் கூடிய இவரது சுபாவமே, முதல்வர் பதவிக்கு தகுதியானவராக மாற்றி இருக்கிறது.

காங்கிரஸ் வெற்றிக்கு காரணகர்த்தா

சதீசனின் அயராத உழைப்பால் தான் 2024 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கேரளத்தில் 20ல் 18 இடங்களை பிடித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசை ஆட்சி பீடம் ஏற்றி இருக்கிறார் சதீசன்.

19ம் தேதி பதவியேற்பு

கேரள முதலமைச்சராக வரும் 19ம் தேதி பதவியேற்கிறார் வி.டி. சதீசன். ராகுல் காந்தி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

முதல்வர் விஜய் பங்கேற்பு?

தமிழக முதல்வர் விஜயும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in