முடிவுக்கு வந்த ஈரான் அமெரிக்க போர் ஒப்பந்தம்
100 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த ஈரான் அமெரிக்க போரனது தற்போது முடிக்கு வருவதாக் அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார், மேலும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படும்
அமைதி பேச்சுவாரத்தை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான நிலையில் , லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும்
இந்த ஒப்பந்தம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படுவதற்கும் உறுதியளித்துள்ளது.
உலகளவில் ஏற்ப்பட்டி வந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடனது குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
பெட்ரோல் டீசல் விலை குறையுமா
அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டதால் பெட்ரோல் , டீசல் விலை குறையுமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தும் , தட்டுப்பாடையும் சந்தித்து வந்தது , இந்த நிலையில் விலை குறைந்ததை அடுத்து , விலையில் மாற்றம் ஏது நிகழுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது
பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி
இந்தியாவில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.3.94 மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் , சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்ற காரணத்திற்காக உயர்த்தப்பட்ட விலைகளை உடனே குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்
தட்டுப்பாட்டால் அரசுக்கு நஷ்டம் மட்டுமே
தொடர்ந்து இது குறித்து பேசிய அமைச்சர் ,போர் தொடங்கியதில் இருந்தே எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன அந்த பாதிப்பை ஒன்றிய அரசு ஏற்று கொண்டது. இதனால் அரசுக்கு ரூ.12,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
============================