முடிவுக்கு வந்த போர் : பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை : அமைச்சர் ஹர்தீப் சிங் புரி...!

தற்​போதைய சூழ்​நிலை​யில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்​பது நியாய​மானதல்ல என பெட்​ரோலி​யத் துறை அமைச்​சர் ஹர்தீப் சிங் புரி தெரி​வித்​துள்​ளார்.
War is over: No chance of petrol, diesel prices coming down: Hardeep Singh Puri
War is over: No chance of petrol, diesel prices coming down: Hardeep Singh Puri google
1 min read

முடிவுக்கு வந்த போர், திறக்கப்பட்ட ஹோர்மூஸ்

ஈரான் அமெரிக்க இடையே நீடித்து வந்த போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்படானது ஏற்ப்பட்டது , குறிப்பாக வளைகுட நாடுகள் பெருமளவில் பாதிப்பை சந்தித்தது ,

இதனால் அனைத்து எரிப்பொருள் கப்பலகளையும் ஈரான் அனுமதிக்கமால் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது ,இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடானது ஏற்பட்டிருந்தது

ஈரான் அமெரிக்க இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில் ,ஹோர்மூஸ் நீரிணை கட்டுப்பாட்டை விலக்கி கொள்வதாக ஈரான் ஒப்பந்தம் மூலமாக உறுதியளித்திருந்தது

இந்தியா நோக்கி வரும் எண்ணெய் கப்பல்கள்

போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா நோக்கி வந்துக்கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது

தற்போது விலை குறைப்பு இல்லை

போர் முடிவுக்கு வந்தாலும் தற்​போதைய சூழ்​நிலை​யில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்​பது நியாய​மானதல்ல என பெட்​ரோலி​யத் துறை அமைச்​சர் ஹர்தீப் சிங் புரி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 4 ஆண்டு​களில் பெட்​ரோல் விலை வெறும் 5.58 சதவீத​மும், டீசல் விலை 6.23 சதவீத​மும் மட்​டுமே உயர்ந்​துள்​ள​தாக அவர் தெரிவித்துள்ளார்

பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோலிய விலை குறைப்பு குறித்து பேசிய அமைச்சர் ,அரசுக்​குச் சொந்​த​மான எண்​ணெய் நிறு​வனங்​கள் இன்​னும் சுமார் ரூ.2.18 லட்​சம் கோடி அளவி​லான நஷ்ட ஈட்​டுத்​தொகையை சமாளித்து வரு​வ​தாக​வும்,

கச்சா எண்​ணெய் விலை மிக அதிகமாக இருந்த கால கட்​டத்​தில் வாங்​கப்​பட்ட கையிருப்​பு​களை இன்னும் வைத்​திருப்​ப​தாக​வும் அவர் தெரி​வித்​தார்.

நுகர்வோரை பாதுகாத்தது அரசு, ஹர்தீப் சிங் புரி

தொடர்ந்து நீடித்த போர் சூழல் மற்றும் எரிபொஇருளின் முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணைய முடக்கப்பட்ட காலத்திலும் சந்​தை​யில் ஏற்பட்ட ஏற்ற, இறக்​கங்​களில் இருந்து நுகர்​வோரை அரசு பெரும்பாலும் பாது​காத்து வந்​தது என்று தெரிவித்தார்

கச்சா எண்​ணெய் நெருக்​கடி​யால் ஏற்​பட்ட பெரும்​பாலான தாக்கங்​களை அரசே ஏற்​றுக் கொண்​ட​தாக​வும், ஒரே ஒரு சில்லறை விற்​பனை நிலை​யம் கூட எரிபொருள் இல்​லாமல் காலியாக இல்​லை.

நாட்​டில் சுமார் 1.07 லட்​சம் பெட்​ரோல் பங்க்குகள் இயங்கி வரு​வ​தாக​வும் , இந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in