வயநாடு நிலச்சரிவு : இயற்கை பேரிடர் இல்லை என விளக்கம் : 2 பேர் பலி, 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்...!

வயநாடு நிலச்சரிவானது இயற்கையாக ஏற்ப்பட்டதல்ல , இது முற்றிலும் மனித அலட்சியத்தால் ஏற்பட்டதே என்று கேரள வேளாண்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்
Wayanad Landslide: not to be a natural disaster; 2 dead, intensive search underway for over 30 people.
Wayanad Landslide: not to be a natural disaster; 2 dead, intensive search underway for over 30 people.Mathrubhumi twitter
1 min read

வயநாடு நிலச்சரிவு ,இயற்கையாக ஏற்ப்பட்டதல்ல

மெப்பாடியில் மீனாட்சி பாலம் அருகே பெய்த பலத்த மழையால் குன்றுகளில் இருந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு. மேலும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த நிலச்சசிவு இயற்கை பேரிடரால ஏற்பட்டதல்ல என்றும் மாறாக மனிதர்களால் ஏற்ப்பட்ட அலட்சியத்தின் காரணமாகவே இந்த நிலச்சரிவானது ஏற்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது

நிலச்சரிவு , 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

கேரள மாநிலம் வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது

சுரங்கப்பாதை பணிகள் நடந்து கொண்டிருந்தபோது மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், சேற்றில் புதையுண்ட ஒரு தொழிலாளி உட்பட 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்

இந்த நிலச்சரிவில் எஸ்டேட் பகுதியில் சிலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளதை அடுத்து அங்குள்ள தற்காலிக பேருந்து நிறுத்தமும் மண்ணில் புதைந்துள்ளது , இதனையடுத்து மண்ணில் சிக்கியவர்கர்களை தேடி வருகின்றனர்

மீட்பு பணியில் பேரிடர் குழு , பாதுக்காப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்

நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ள இடத்தில் பாலம் ஒன்று இடியும் நிலையில் உள்ளதால், ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் விரைந்துள்ளது

வெளியான நிலச்சரிவின் பதைபதைக்கும் காட்சிகள்

நிலச்சரிவு ஏற்ப்பட்ட இடத்தின் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது , இதில் சிலர் நுலிழையில் உயிர் தப்பியுள்ளனர் ,

ஆலோசனை நடத்திய முதல்வர்

நிலச்சரிவு குறித்து கேரளா முதலமைச்சர் வி.டி. சதீசன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அமைச்சர்கள் வயநாட்டிற்கு விரைந்துள்ளனர்.இந்த நிலையில் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in