

"We may oppose Prime Minister Modi, but an American cannot dictate to India" owaisi given sharp retort to Elon Musk
இந்தியா மீது எலான் மஸ்க் காட்டம்
ஸ்டார்லிங் விவகாரத்தில் இந்தியா மீது எலான் மஸ்க் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கா விட்டாலும், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்கிற்கு கண்டனம்
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் பேசுகையில், “முகேஷ் அம்பானிதான் ‘இந்தியாவின் நிஜ பாஸா?’ என்று கேள்வி எழுப்பிய உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது.
பிரதமர் மோடியை நாங்கள் எதிர்க்கலாம்
நாங்கள் எப்போதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள்தான். ஆனால் ஒரு வெளிநாட்டவர் (அமெரிக்கர்) எவ்வாறு நம் பிரதமரைப் பற்றி இத்தகைய கருத்துக்களை எழுத முடியும்?
நாட்டின் வளங்கள் - இந்தியா தான் தீர்மானிக்கும்
நாட்டின் வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நமது நாடுதான் தீர்மானிக்கும். இந்த வெள்ளையர் எங்கோ உட்கார்ந்து கொண்டு நமக்கு உத்தரவிடுவாரா?
மோடி அரசு பதில் கொடுக்கணும்
ஒரு வெளிநாட்டுத் தொழிலதிபர் நமது நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும்போது, தேசியவாதம் பற்றி எப்போதும் பேசும் பாஜகவும் மோடி அரசும் ஏன் மவுனமாக உள்ளது?
இந்தியர்களுக்கே முன்னுரிமை
இந்திய ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒரு வெளிநாட்டவரின் நலனுக்காக இந்தியர்களின் நலனைப் பலி கொடுக்கக் கூடாது.
சொந்த நாட்டில் அரசைக் கண்டிப்பதற்கும், ஒரு வெளிநாட்டு தொழிலதிபர் நமது நாட்டுக்கு நிபந்தனைகளை விதிக்க அனுமதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது”, என்று ஒவைசி தெரிவித்தார்.
==============