மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல், பாஜக வெற்றி : பிரதமர் உணர்ச்சிபூர்வமான உரை!

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பார​திய ஜனதா கட்சி 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களைக் கைப்​பற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது
West Bengal Assembly Elections, BJP Wins:
West Bengal Assembly Elections, BJP Wins: google
2 min read

வெற்றியை வசப்படுத்திய பாஜக

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பார​திய ஜனதா கட்சி 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களைக் கைப்​பற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது, இந்த வெற்றி மம்தாவின் நீண்ட ஆட்சியை முறியடித்துள்ளது.

மேற்குவங்க வெற்றி : பிரதமர் உரை

மேற்கு வங்க தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கைவசப்படுத்தி பாஜக நீண்ட கால ஆண்டிற்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது .

வெற்றியை மாநிலத்​தின் வரலாற்​றில் அச்​சமற்ற ஒரு புதிய சகாப்​தத்​தின் தொடக்​கம் என்று பிரதமர் நரேந்​திர மோடி உணர்ச்​சிப்​பூர்​வ​மாகக் உரையாற்றியுள்ளார்.

வெற்றியை கொண்டாடிய பிரதமர்

மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றியை கொண்​டாடு​வதற்​காக பிரதமர் மோடி நேற்று டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​துக்கு சென்றார்

அப்​போது அவர் தொண்​டர்​களிடம் உணர்ச்​சிப்​பூர்​வ​மாக உரையாற்றினார்

வெற்றி குறித்து உரையாற்றிய பிரதமர்

மேற்கு வங்க தேர்​தல் வரலாற்று வெற்​றி​யின் மூலம், கங்​கோத்​திரி முதல் கங்கா சாகர் வரை எங்​கும் தாமரை மலர்ந்​துள்​ளதுள்ளதாகவும் .

15 ஆண்டு கால மம்தா பானர்​ஜி​யின் திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சியை வீழ்த்​தி, முதன்​முறை​யாக மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆட்​சிப் பொறுப்பை ஏற்​பது இந்​திய அரசி​யலில் ஒரு முக்​கிய திருப்​பு​முனை​யாக இருக்​கிறது.

இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய ஜனநாயக​மும், நமது அரசி​யலமைப்​பும் மீண்​டும் ஒரு​முறை வென்​றுள்​ளது. இதற்​கு, கட்​சித் தலை​வர் நிதின் நவீன் வழி​காட்​டு​தலும், தொண்​டர்​களின் அயராத உழைப்​புமே காரணம்.

நிதின் நவீன் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற பிறகு சந்​தித்த முதல் தேர்​தலிலேயே இந்த பிரம்​மாண்ட வெற்றி பாஜக​வுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

மேற்கு வங்​கத்​தில் நிலவி வரும் வன்​முறை அரசி​யலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும். இனி வரும் காலங்​களில் பழி வாங்​கும் அரசி​யலுக்​குப் பதிலாகப் பண்​பட்ட மாற்​றத்​துக்​கான அரசி​யலே இங்கு முன்​னிறுத்​தப்பட வேண்​டும்.

மேற்கு வங்​கம் மட்​டுமின்​றி, மகா​ராஷ்டி​ரா, குஜ​ராத், நாகாலாந்து மற்​றும் திரிபுரா ஆகிய மாநிலங்​களில் நடை​பெற்ற இடைத்​தேர்​தல் முடிவு​களும் பாஜக​வுக்கு மிகுந்த ஊக்​கமளிப்​ப​தாக உள்​ளன. குறிப்​பாக, பாராமதி தொகு​தி​யில் மகா​ராஷ்டிர துணை முதல்​வர் சுனேத்ரா பவார் பெற்ற வெற்றி பாராட்​டுக்​குரியது என்றும் தெரிவித்தார்

வங்க மண்னில் புதிய அரசியல் ; பிரதமர் பெருமிதம்

இரண்டு கட்​டங்​களாக நடை​பெற்ற மேற்கு வங்க தேர்​தலில், பல்​வேறு சவால்​களைக் கடந்து பாஜக பெரும்​பான்​மைக்​குத் தேவை​யான 148 இடங்​களைத் தாண்டி 200-க்​கும் அதி​க​மான தொகு​தி​களைக் கைப்​பற்றி வங்க மண்​ணில் புதிய அரசி​யல் வரலாற்றை எழு​தி​யுள்​ளது பாஜ எழுதியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார் பிரதமே மோடி.

அமித் ஷா வாழ்த்து

மேற்கு வங்​கத்​தில் 2 வாரங்​களுக்கு மேலாக முகாமிட்டு தேர்​தல் வியூ​கங்​களை வகுத்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ‘‘இந்த வெற்றி வரலாற்று சாதனை’’ என்று புகழாரம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி ஊடுரு​வல்​காரர்​களுக்​கு ஒரு பாட​மாக அமைந்​துள்​ளது

என்​றும்​ குறிப்பிட்டு உரையாற்றினார்.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பார​திய ஜனதா கட்சி 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களைக் கைப்​பற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது, இந்த வெற்றி மம்தாவின் நீண்ட ஆட்சியை முறியடித்துள்ளது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in