மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி அழுது கொண்டிருக்கிறது : மம்தா!

Mamata Banerjee Supreme Court Case Update in Tamil : நான் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளேன் என மம்தா பேனர்ஜி நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.
West Bengal CM Mamata Banerjee To Argue Plea Against WB SIR Electoral Roll Issue Case Updates From Supreme Court in Tamil
West Bengal CM Mamata Banerjee To Argue Plea Against WB SIR Electoral Roll Issue Case Updates From Supreme Court in TamilSource : Google
2 min read

பேசுபொருளாான மம்தா பேனர்ஜியின் வழக்கு

Mamata Banerjee Supreme Court Case Update in Tamil : மேற்குவங்க மாநில அரசாங்கத்தின் சார்பில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருக்கிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தானே நேரில் ஆஜராகி வாதாடினார்.

முதல்வரே நேரில் வாதாடிய இந்த வழக்கு இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியாவில் பல மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணி நடந்து வருகிறது. அதே நேரம் இந்த நடைமுறையால் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

வாதாடிய மம்தா பானர்ஜி

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்காளத்தில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி இன்று இந்த வழக்கு விசாரணையில் மம்தா பேனர்ஜி அவர்களே நேரடியாக வாதாடினார்.

ஞானேஷ் குமாரை சந்தித்த பேசிய மம்தா பேனர்ஜி குழுவினர்

குறிப்பாக, இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்கம் சார்பில் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "தற்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலை வைத்து 2026 சட்டசபை தேர்தலை நடத்தாமல், அதற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை கொண்டே தேர்தலை நடத்த வேண்டுமென" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான குழுவினர், எஸ்ஐஆர் பணியை நிறுத்துமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்து பேசினார்.

பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர நினைக்கிறோம்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. இதில் பாஜக ஆட்சியில் இருக்கும் அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடக்கிறது.

58 லட்சம் பேர் நீக்கம் மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியால் வாக்காளர் பட்டியலில் இருந்து 58 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அவர்களில் சிலர் டெல்லிக்கு வந்துள்ள நிலையில், தேவைப்பட்டால் எஸ்ஐஆர் பணியால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களையும் அழைத்து வருவோம். இதுவரை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்ஐஆர் பணியை நிறுத்துமாறு ஆறு கடிதங்களை எழுதியும், பதில் எதுவும் கிடைக்கவில்லை.

அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்ட வர நினைக்கிறோம்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் மம்தா பேனர்ஜி வாதம்

வாதாடுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தலைமை நீதிபதியின் அறைக்குள் நுழைந்தபோது, ​​சவால் விடும் தொனியில் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடினார்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி அழுது கொண்டிருக்கிறது என்று முழங்கிய அவர், தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன் தனது வழக்கை முன்வைக்க ஐந்து நிமிடங்கள் கோரினார்.

15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார்.

தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

பிரச்னை என்னவென்றால், இறுதியில், எங்களுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை. நான் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு ஆறு முறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நீதி அழுது கொண்டிருக்கிறது" என்று கூறி, முதலமைச்சர் தனது வாதங்களைத் தொடங்கினார்.

இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான ஒரு முழுமையான தாக்குதலாக மாறியது. பானர்ஜியின் கோரிக்கை நியாயமானது என்பதை நீதிபதிகள் அமர்வு ஏற்றுக்கொண்டதுடன், ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்றும் உறுதியளித்தது.

மேலும், பானர்ஜியின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in