மேற்குவங்கம் : சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருக்கு நீடிக்கும் இழுபறி , உடையும் திரிணாமுல் , அதிருப்தியில் மம்தா

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது, 80 எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் போர்க்கொடி தூக்கியிருப்பது மம்தாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
West Bengal: The ongoing tug-of-war over the Leader of Opposition in the Legislative Assembly
West Bengal: The ongoing tug-of-war over the Leader of Opposition in the Legislative Assembly google
2 min read

மம்தாவிற்கு எதிராக போர்கொடி

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பல ஆண்டுகளுக்கு பிறகு மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜக அட்சியை கைப்பற்றியதுன், இந்த நிலையில் சில நாட்ளாகவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகுள்ளையே பிளவ்வும் மம்தாவிற்கு எதிராகவும் கட்சியினரை போர்கொடி தூக்கினார்கள் ,இது கட்சிக்குள்ளயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது

எதிர்கட்சி தலைவரை நியமிப்பதில் தொடர் சிக்கல்

பாஜகவை சேர்ந்த சுவேந்தி அதிகாரி முதல்வராக பதவியேற்றிருக்கும் நிலையில் , சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு இழுபறிகள் நீடித்து வருகிறது .

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர், சட்டசபை சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் சோவன் தேப் சட்டோபாத்யாய என்பவரை எதிர்க்கட்சித் தலைவராகவும், நயனா பானர்ஜி மற்றும் ஆஷிமா பத்ரா ஆகியோரை துணைத் தலைவர்களாகவும், பிர்ஹாத் ஹக்கீம் என்பவரை கொறடாவாகவும் நியமிக்க கோரப்பட்டிருந்தது.

கையெழுத்துகள் போலியானவை ; அடுத்த சர்சை

இந்த நிலையில் புதிய எதிர்கட்சி தலைவரை நியமிக்க 70 எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் அடங்கிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள கையெழுத்துகள் போலியானவை என ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சஹா ஆகிய 2 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர்

சிஐடி விசாரணை

ஹரே ஸ்டிரீட் போலீசார் வழக்கு பதிவு செய்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சந்தீபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகிய 2 எம்எல்ஏக்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அதிரடியாக நீக்கியது இந்தச் சம்பவம் கட்சினரிடையே மீண்டும் அதிருப்தியையும் , கட்சிகுள் பிளவையும் ஏற்படுத்தியது

பாஜகவிற்கு மாறும் கட்சியினர் , அதிர்சியில் மம்தா

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் சிலர் பாஜகவுக்குத் தாவும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மம்தாவின் மிக நெருக்கமானவராக அறியப்படும், திரிணமூலின் மூத்த எம்.பி. காகோலி கோஷ் தஸ்தி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜிநாமா செய்தார் , இது மம்தா மற்றும் கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியது

மம்தாவிற்கு எதிரான போர்கொடி

கட்சியினரிடையே பிளவானது ஏற்பட்டிருக்கும் நிலையில் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கவனம் பெறும் தபஸ் ராய் பதிவு

மம்தாவிற்கு எதிராக அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் , தற்போதுதபஸ் ராய் பதிவு கவனம் பெற்றுப் வருகிறது , அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது , கடந்த 2024 ஆம் ஆண்டு திரிணமூல காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தபஸ் ராய், சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரின் முகநூல் பதிவு புயலைக் கிளப்பியுள்ளது.

"திரிணமூல் காங்கிரஸ் துண்டு துண்டாகச் சிதறி வருகிறது. மகாராஷ்டிரத்தைப் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜியுடன் 50 திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளதாவது

இந்த கட்சி பிளவு குறித்து மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா கூறியதாவது , "திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலர் ஆளும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போதைக்கு யாரும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். ஊழல் கறை படிந்தவர்களுக்கு பாஜகவில் இடம் கிடையாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in