ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்
இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதலில் அசாம் , கேரளம் , புதுச்சேரிக்கு ஆகிய மாநிலங்களுக்கு தேர்தலானது ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
பின்னர் தமிழகம் , மற்றும் மேற்கு வங்கத்திற்கு
முதற்கட்டமாக நடைபெற்று முடிந்தது, இந்நிலையில் நேற்று மேற்குவங்கத்தின் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்தது
மேற்கு வங்கம் இரு கட்ட வாக்கு சதவிகிதம்
இறுதி கட்ட வாக்கு பதிவில் மேற்கு வங்கத்தில் காலை 11 மணிக்கு 39 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 3 மணிக்கு 78.77 சதவீத வாக்குகளும், மாலை 5 மணிக்கு 89.88 சதவீத வாக்குகளும்.
இறுதியாக மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 92.6 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதன் மூலம் மேற்கு வங்கத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 92.9 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன
ஒரே தொகுதியில் களம் காணும் மம்தா-சுவேந்து
ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் , மம்தா பானர்ஜியும், பாஜவின் சுவேந்து அதிகாரியும் தங்களின் பவானிபூர் தொகுதியில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சக்ரபேரியாவின் 70வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் மம்தா-சுவேந்து அதிகாரி ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தேர்தலுக்கு பிறகும் பாதுகாப்பில் வீரர்கள்
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேர்தல் முடிந்த பிறகும் , 700 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தங்கியிருப்பார்கள் என தேர்தல் அதிகாரி கூறி உள்ளார்.
கடந்த 2021ல் தேர்தல் முடிவுக்குப் பிறகு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்ததால் இம்முறை தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் அமைதியை நிலைநாட்டுவதை நோக்கமாக கொண்டு மத்திய படைகள் தொடர்ந்து தங்கியிருக்க தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
தேர்தல் நடவடிக்கை குறித்து பேசிய மம்தா
தேர்தல் நடவடிக்கைள் குறித்து பேசிய மம்தா ,மத்திய பாதுகாப்பு படைகளின் அட்டூழியம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளதாகவும், இங்கு நடைபெறுவது துளியும் சுதந்திரமான நியாயமான தேர்தல் அல்ல.
மத்திய படைகள் அரசியலமைப்பு சார்ந்த கடமையை செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இது சாமானிய மக்களை துன்புறுத்துவதாக உள்ளது என்றும், தெரிவித்துள்ளார்.
=========