ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட "தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்" : இந்தியாவில் தடை! பின்னணி என்ன?

The Voice of Hind Rajab Movie Banned in India : ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' படத்துக்கு இஸ்ரேலுடனான உறவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா தடை விதித்துள்ளது
What is the background behind the Oscar-nominated film 'The Voice of Hind Rajab'? banned in India
What is the background behind the Oscar-nominated film 'The Voice of Hind Rajab'? banned in Indiagoogle
1 min read

இந்தியா தடை செய்ததற்கான காரணம்

The Voice of Hind Rajab Movie Banned in India : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' திரைப்படம், 2024 காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுமியின் கதையை பற்றியது. இத்திரைப்படமானது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்பட்டது.

CBFC சான்றிதழ் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் இத்திரைப்படமானது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் தடை செய்யப்பட்டுள்ளது

தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் (The Voice of Hind Rajab)'

2024-ஆம் ஆண்டு காசா போரில் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட 5 வயது சிறுமியைப் பற்றிய திரைப்படம் தான் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் .

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படமானது இஸ்ரேலுடனான உறவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா தடை விதித்துள்ளது .,மேலும் இதற்கு திரைப்படச் சான்றிதழ் வறியமும் வாய்வழியாக தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

நிராகரிப்பு குறித்து இத்திரைப்பட குழு கூறுவதாவது

பல திரைப்பட விழாக்களில் இத்திரைப்படத்திற்கு அனுமதியானது மறுக்கப்பட்டிருப்பதாகவும் ,குறிப்பாக பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா மற்றும் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கூட படத்திற்கு அனுமதியானது மறுக்க பட்டதாகவும்,

இந்தியாவில் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் மட்டுமே இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படம் குறித்து மத்திய நிதி ஆணையத்தின் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், தற்போது அவர்களால் அது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in