துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம் : ஆகஸ்டு 15க்குள் தேர்தல்?

Vice President Of India Elections 2025 : குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
Election Commission Begins Vice President Of India Elections 2025
Election Commission Begins Vice President Of India Elections 2025
2 min read

குடியரசு துணைத் தலைவர் :

Vice President Of India Elections 2025 : இந்திய அரசியல் அமைப்பில் குடியரசு தலைவருக்கு அடுத்தபடியாக உயரிய பொறுப்பில் இருப்பவர், குடியரசு துணைத் தலைவர். ராஜ்யசபா தலைவர் பதவியையும் இவரே அலங்கரிக்கிறார். இந்தப் பதவியில் இருந்து ஜெக்தீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். அவரது பதவி விலகல் கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது

துணை ஜனாதிபதி தேர்தல் :

இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானால், 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும்.

மழைக்கால கூட்டத் தொடரில் தேர்தல் :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரிலேயே துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம். அதாவது, ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரத் தினத்திற்கு முன்பே குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு :

மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக 457 உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு போதிய ஆதரவில்லை :

இரு அவைகளிலும் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு மக்களவையில் 99 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 27 உறுப்பினர்களும் உள்ளனர். இண்டியா கூட்டணி கட்சிகளும், பிற எதிர்க்கட்சிகளும் இணைந்து இரு அவைகளிலும் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அணியில் இடம்பெறாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளுக்கு மாநிலங்களவையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிகள் :

2017ம் ஆண்டில் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தரப்பில் வெங்கையா நாயுடு மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி போட்டியிட்டனர். அப்போது வெங்கையா நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2022ம் ஆண்டில் பாஜக தரப்பின் ஜெகதீப் தன்கர் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்க்ரெட் ஆல்வா இடையே போட்டி இருந்தது. அப்போது தன்கர் 346 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மீதான கோபம் காரணமாக திரிணாமூல் எம்பிக்கள் 35 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in