5 State Elections : வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் “மகளிர் வாக்கு வங்கி” : நலத்திட்டங்களில் அரசியல் கட்சிகள் அக்கறை!

5 State Assembly Elections 2026 : 5 மாநிலத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவது, யாரை வர விடாமல் தடுப்பது என்ற முடிவினை எடுக்கும் மிகப்பெரிய சக்தியாக மகளிர் உருவெடுத்து உள்ளனர்.
Womens emerged as  major force process of who comes to power and who is prevented from coming to power in 2026 elections
Womens emerged as major force process of who comes to power and who is prevented from coming to power in 2026 electionsgoogle
2 min read

தேர்தலில் பெண்களின் பங்களிப்பு

5 State Assembly Elections 2026 : ஒரு காலத்தில் அரசியல், தேர்தல், வாக்கு என்பது எல்லாம் குடும்பத் தலைவர் எடுக்கும் முடிவாக இருந்தது. அவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அந்தக் கட்சிக்கு, வேட்பாளருக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் வாக்களித்து விட்டு வருவார்கள். ஆனால், அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது.

விழிப்புணர்வு மிக்க பெண் வாக்காளர்கள்

வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் அவர்களின் அரசியல் விழிப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

குடும்பத்தின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் நிறுத்தி, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘நிர்ணய சக்தியாக’ பெண் வாக்காளர்கள் உருவெடுத்து விட்டார்கள்.

வாக்களிப்பது சொந்த உரிமை

வாக்களித்தல் அவர்களது சுயசார்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் காரணமாக கடந்த ஐந்து தேர்தல்களில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்களே வாக்களித்து (Turnout) வந்திருப்பதைத் தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பெண் வாக்காளர்கள் 48 கோடி

இந்தியாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 99.1 கோடி. இதில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 48 கோடி.

தேசிய அளவில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் ஏறக்குறைய 50 லட்சம் அதிகம் உள்ளனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

ஐந்து மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் 7.15 கோடி, மகாராஷ்டிரத்தில் 4.50 கோடி, மேற்கு வங்கத்தில் 3.73 கோடி, பிஹாரில் 3.51 கோடி, தமிழ்நாட்டில் 2.89 கோடி என பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்த ஆண் வாக்காளர்கள் 2.77 கோடி. ஆனால், ஆண்களைவிட 12 லட்சம் பெண் வாக்காளர்கள் இங்கு அதிகம் உள்ளனர்.

மௌனப் புரட்சி செய்யும் பெண்கள்

அதேபோல் பாலின விகித அடிப்​படையில் தமிழ்​நாட்டில் 1,000 ஆண் வாக்காளர்​களுக்கு ஏறக்குறைய 1,044 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த விகிதம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றும் ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ (Swing Voters) என்கிற மௌனப் புரட்​சி​யாளர்​களாக, வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக (Deciding Factor) பெண் வாக்காளர்​களைக் கருத வைக்​கிறது.

தேர்தலுக்கு முன்பு முடிவு எடுக்கும் பெண்கள்

ஆண்களைவிட எண்ணிக்கை அடிப்​படையில் பெண்கள் முதன்மை வாக்கு​வங்​கி​யாகப் (Primary vote bank) பார்க்​கப்​படு​வதற்கு இன்னொரு முக்கியமான காரணம், பெண் வாக்காளர்கள் தேர்தல் நாளுக்கு முன்பாக தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாக ஆய்வுகள் குறிப்​பிடு​கின்றன.

தமிழகத்தில் பலமுனைப் போட்டி

தமிழகம் உள்படப் பெரும்​பாலான மாநிலங்​களில் மூன்று முதல் நான்கு அணிகளாக அரசியல் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டி​யிடு​கின்றன. எனவே, பெரும்​பாலான தொகுதி​களில் வெற்றி வித்தி​யாசம் என்பது 5,000 முதல் 20,000 வாக்கு​களுக்​குள்​ளா சுருங்கி​ விடு​கிறது.

வெற்றி - பெண்கள் கையில்

அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில், பெண் வாக்காளர்​களில் 2 முதல் 5 சதவீதம் பேர் இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவு​களால் தேர்தல் முடிவுகள் மாறிவிடுகிறது. இது கடந்த பல தேர்தல்​களில் நடந்திருக்​கிறது. வாக்களிக்கும் பெண்கள், எல்லாப் பெரிய கட்சிகளுக்கும் அவற்றின் வாங்கு வங்கியின் அஸ்தி​வார​மாகத் திகழ்​கிறார்கள்.

நடுநிலை பெண்களின் கையில் முடிவு

ஆனாலும், எந்தக் கட்சி​யையும் சாராத பெண் வாக்காளர்கள் இவர்களைவிட அதிகம். இவர்களில் படித்​துக்​ கொண்​டிருக்கும் பெண்கள், பட்டதாரிப் பெண்கள், படித்து வேலைக்குச் செல்பவர்கள், வேலை தேடிக்​கொண்​டிருப்​பவர்கள், வீட்டிலிருந்தே சுயதொழில் செய்பவர்கள், இல்லத் தலைவியர் எனப் பலவாறான நிலைகளில் உள்ளனர்.

இவர்களே தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தி​கொண்ட ‘ஸ்விங் வோட்டர்ஸ்’ என அழைக்​கப்​படு​ கின்​றனர். இந்த நடுநிலைப் பெண் வாக்காளர்களை மனதில்​கொண்டே நலத்திட்​டங்கள் தீட்டப்​பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

பெண்கள் நலத் திட்டங்கள்

தொலைக்​காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற இலவசத் திட்டங்​களைத் தாண்டி, தற்போது இலவச எரிவாயு, மகளிர் உரிமைத் தொகை, கல்வி கற்கும் காலத்​துக்கான உதவித்​தொகை, இலவசப் பேருந்துப் பயணம், கருப்பை வாய்ப் புற்று​நோய்த் தடுப்பூசி போன்ற திட்டங்கள், பெண்கள் நேரடி​யாகப் பயன்பெறும் திட்டங்களாக (Direct Benefit Schemes) அவை செயல்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் அன்றாட வாழ்வில் அதிக முக்கி​யத்துவம் பெறும் விஷயங்கள், பிரச்னைகள் மீது எந்த அரசு அல்லது எந்தக் கட்சி அக்கறை செலுத்துகிறதோ, அவர்களுக்கே ஆதரவு அதிகமாகக் கிடைக்கிறது. வெற்றியும் எளிதாகி விடுகிறது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in