”மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஆதரவு 298, எதிர்ப்பு 230” : மக்களவையில் தோல்வி, நடந்தது என்ன?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 3ல் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால், மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
Women's Reservation Bill could not be passed in Lok Sabha,  did not receive two-thirds support vote held on it.
Women's Reservation Bill could not be passed in Lok Sabha, did not receive two-thirds support vote held on it.google
2 min read

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா உட்பட 3 மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

2023ல் சட்டம் நிறைவேற்றம்

2023ம் ஆண்​டு மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

மூன்று மசோதாக்கள் அறிமுகம்

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவையில் நேற்று முன்தினம் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தொடக்​கத்​தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மசோதா மீதான விவாதம் அன்றைய தினம் நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது. இரண்டாவது நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்​தது.

எம்பிக்கள் ஆதரவு, எதிர்ப்பு

கனி​மொழி, ஆ.ராசா (தி​முக), சசி தரூர், ஜோதி​மணி (காங்​கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ்), ராஜீவ் ரஞ்​சன் சிங் (ஐஜத), கல்​யாண் பானர்ஜி (திரிண​மூல் காங்​கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவ​ராயலு (தெலுங்கு தேசம்),

டிம்​பிள் யாதவ் (சமாஜ்​வா​தி), ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேம​மாலினி (பாஜக) உள்​ளிட்ட எம்​.பி.க்​கள் மசோ​தாவுக்கு ஆதர​வாக​வும், எதிர்ப்​பாக​வும் பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்​தனர்.

மத்திய அமைச்சர்கள் பதில்

உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்கு மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பதில் அளித்​தனர்.

பிரதமர் மோடி வேண்டுகோள்

மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மீதான வாக்​கெடுப்பை முன்​னிட்டு எம்பிக்களுக்கு பிரதமர் மோடி வேண்​டு​கோள் விடுத்​தார். ‘மகளிர் இடஒதுக்​கீடு விஷ​யத்​தில் கடந்த 40 ஆண்​டு​களாக அரசி​யல் செய்​யப்​பட்டு வந்​தது.

சுதந்​திரம் பெற்று பல ஆண்​டு​கள் ஆனபிறகும், முடிவு எடுக்​கும் விஷ​யத்​தில் மகளிருக்கு குறைந்​த​பட்ச பிர​தி​நி​தித்​து​வம்​கூட தரப்​பட​வில்​லை.

உங்​களது தாய், சகோ​தரி, மனை​வி, மகள் ஆகியோரை நினைத்​துப் பார்த்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா விஷ​யத்​தில் மனசாட்​சிப்​படி முடிவு எடுக்க வேண்​டும்.

மகளிருக்கு அதி​காரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்​துள்​ளது. எனவே, அவர்​களுக்​கான புதிய வாய்ப்​பு​களை பறிக்​காதீர்​கள்.

தயவுசெய்து உரிய பரிசீலனை செய்​து, முழுஉணர்​வுடன் முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

அமித் ஷா விளக்​கம்

மக்​களவை​யில் மசோதா குறித்து உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். தொகுதி மறுசீரமைப்​பின் முடி​வில் தமிழகம் உள்​ளிட்ட தென் மாநிலங்​களுக்கு எத்​தனை தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்ற பட்​டியலை​யும் அவர் வெளி​யிட்​டார்.

தொகுதி மறுசீரமைப்பு காரண​மாக தென் மாநிலங்​களுக்கு அதிக இழப்பு ஏற்​படும் என்று குற்​றச்​சாட்டு எழுந்த நிலை​யில், இந்த பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது.

மக்களவை இடங்கள் 850

மறு​வரையறை மூலம் தொகு​தி​கள் எண்​ணிக்கை 850 ஆக அதி​கரிக்​கப்​படும்​போது எந்​தெந்த மாநிலங்​களுக்கு எவ்​வளவு தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்​பது குறித்​தும் விளக்​கம் அளித்​தார்.

தமிழகத்துக்கு 59 எம்பிக்கள்

‘‘தமிழகத்​துக்கு தற்​போது 39 எம்​.பி. தொகு​தி​கள் உள்ள நிலை​யில் தொகுதி மறு​வரையறைக்கு பின்​னர் இந்த எண்​ணிக்கை 59 ஆக உயரும்.

இதே​போல, எம்​.பி. தொகு​தி​கள் எண்​ணிக்கை கேரளா​வில் 20-ல் இருந்து 30 ஆகவும்,

ஆந்​தி​ரா​வில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்​நாட​கா​வில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும்.

தொகுதி மறு​வரையறை​யால் தமிழகத்​துக்கு எந்​த​வித இழப்​பும் ஏற்​ப​டாது. மக்​களவை​யில் தமிழகத்​தின் பிர​தி​நி​தித்​து​வம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதி​கரிக்​கும்.

தொகுதி மறு​வரையறை ஆணை​யத்​தின் அறிக்கை நாடாளு​மன்​றத்​தால் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்ற பிறகே அமல்​படுத்​தப்​படும்.

2029-க்கு முன்பு வரை தற்​போது இருக்​கும் இடங்​களின் எண்​ணிக்​கை​யிலேயே அனைத்து தேர்​தல்​களும் நடை​பெறும்’’ என்று அமித் ஷா உறுதியளித்தார்.

மக்களவையில் வாக்கெடுப்பு

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும், எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர்.

மசோதா தோல்வி

மசோதா நிறைவேற மூன்​றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 எம்​.பி.க்​களின் ஆதரவு இருந்​தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும்.

ஆனால் 298 பேர் மட்டுமே ஆதர​வாக வாக்​களித்​த​தால் மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது.

வாக்​கெடுப்​பின்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. மற்​ற 2 மசோ​தாக்​கள்​ மீதும்​ வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in