”மும்பை தாராவி” ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதி : ரூ.95,790 கோடியில் சீரமைப்பு : மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தம்...!

மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்​டத்​துக்​காக அப்​பகு​தி​யில் வசிக்​கும் மக்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்​தும் பணி தொடங்கி இருக்கிறது.
Work underway to relocate residents of the area to other locations as part of the Mumbai Dharavi redevelopment project
Work underway to relocate residents of the area to other locations as part of the Mumbai Dharavi redevelopment projectgoogle
1 min read

மும்பை தாராவி

ஆசி​யா​வின் மிகப்​பெரிய குடிசைப் பகு​தி​யாக மும்பை தாராவி உள்​ளது. அங்கு சுமார் 2.39 சதுர கி.மீ. பரப்​பில் 10 லட்​சத்​துக்​கும் அதி​க​மாக மக்​கள் வசிக்​கின்​றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்​கள் ஆவர்.

அரசு சார்பில் மறுசீரமைப்பு

இந்த சூழலில் மகா​ராஷ்டிர அரசு சார்​பில் தாராவி மறுசீரமைப்பு திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. அரசு, தனி​யார் பங்​களிப்பு திட்​டத்தின் மூலம் தாராவி முழு​மை​யாக மறுசீரமைக்​கப்பட உள்​ளது.

இதற்​காக தாராவி மறு சீரமைப்பு திட்ட கூட்டு நிறு​வனம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதில் அதானி குழு​மம் 80 சதவீத பங்​கு​களை​யும் மகா​ராஷ்டிர அரசின் குடிசை மறு​வாழ்வு ஆணை​யம் 20 சதவீத பங்​கு​களை​யும் வைத்​துள்​ளன. திட்​டத்​தின் மொத்த மதிப்​பீடு ரூ.95,790 கோடி.

மக்களுக்கு இலவச, நவீன வீடுகள்

தாரா​வி​யில் வசிக்​கும் மக்​களுக்கு 350 சதுர அடி​யில் நவீன வீடு​கள் இலவச​மாக கட்​டிக் கொடுக்​கப்பட உள்​ளன. கட்​டு​மான காலத்​தில் தற்​காலிக​மாக இடம்​பெயரும் தாராவி மக்​களுக்கு மாதாந்​திர உதவித் தொகை​யும் வழங்​கப்படும்.

பொதுமக்களுக்கு மாற்று இடம்

இந்த சூழலில் மும்பை தாராவி மறுசீரமைப்பு திட்​டத்​துக்​காக அப்​பகு​தி​யில் வசிக்​கும் மக்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்​தும் பணி தொடங்​கப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக செக்​டர் 6, சாகுநகர் பகு​தி​யில் வசிக்​கும் குடும்​பங்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டு உள்​ளது.

வீடுகளை காலி செய்ய உதவித்தொகை

அங்​கிருந்து சுமார் 900 பேர் படிப்​படி​யாக வெளி​யேற்​றப்பட உள்​ளனர். இதற்​காக நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து மும்பை மாநக​ராட்சி அதி​காரி​கள் கூறிய​தாவது: தாராவி பகு​தி​களில் இருந்து வீடு​களை காலி செய்ய ரூ.15,000 உதவித் தொகை வழங்​கப்​படு​கிறது.

மாதம் வாடகைப்படி வழங்கப்படும்

மேலும் ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் மாதம் ரூ.22,000 வாடகை படி வழங்​கப்பட உள்​ளது. பெரிய வீடு​களில் வசிக்​கும் குடும்​பங்​களுக்கு தலா ரூ.30,000 வரை வாடகை படி வழங்​கப்​படும்.

2028க்குள் 10,000 வீடுகள் கட்டி முடிப்பு

தாரா​வி​யில் கட்​டப்​படும் புதிய வீடு​களில் மக்​கள் குடியேறும்​வரை மாதந்​தோறும் வாடகைபடி வழங்​கப்​படும். வரும் 2028-ம் ஆண்​டுக்​குள் தாரா​வி​யில் 10,000 வீடு​கள் கட்​டப்​பட்டு பயனாளி​களிடம் ஒப்​படைக்​கப்​படும்.

2032குள் பணிகள் முழுமையாக நிறைவு

வரும் 2032-ம் ஆண்டு ஜனவரிக்​குள் திட்​டப் பணி​களை முழு​மை​யாக நிறைவு செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மட்​டுமன்றி பள்​ளி​கள், சமு​தாய நலக்​கூடங்​கள், பூங்​காக்​கள், மருத்​து​வ​மனை​கள்...

குழந்​தைகள் நல மையங்​கள், வணிக வளாகம், தொழிற்​பூங்கா உள்​ளிட்​ட​வை​யும் தா​ரா​வி​யில் அமைக்​கப்பட உள்​ளதாக மும்​பை மாநக​ராட்​சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in