மோடியின் Selfie வீடியோக்கள் : இளைஞர்களோடு நேரடி தொடர்பு : 303 மில்லியன் பார்வைகளுடன் சாதனை : அமைச்சர்களுக்கும் உத்தரவு.!

பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ மூலம், 303 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
world record set with the selfie video recently released by Prime Minister Modi, garnering 303 million viewers
world record set with the selfie video recently released by Prime Minister Modi, garnering 303 million viewersAI generated
2 min read

டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகள் காரணமாக டெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கேள்வித்தாள் கசிவைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள், கடுமையான தண்டனைகள் குறித்து புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இளைஞர்களை நோக்கி பிரதமர் மோடி

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி வீடியோ மூலம் அறிவிப்புகளை வெளியிட்டார். இளைஞர்களை குறிவைத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வழியாக தொடர்ந்து வீடியோக்களை மோடி வெளியிட்டு வருகிறார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

பொதுவாக பிரதமர் மோடியின் வீடியோ அவரின் அனைத்து சமூகவலைத்தள பக்கங்களிலும் வெளியாகும். ஆனால் நீட் விவகாரம் தொடர்பான நிலையில், இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் மட்டுமே வெளியாகியுள்ளது.

இளைஞர்களுக்கு விளக்கம்

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் ஆகிய சமூக வளைதளங்களில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பிரதமர் மோடி வாக்குறுதி

அதில், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

2வது செல்ஃபி வீடியோ

நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி மீண்டும் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் பதிவிட்ட வீடியோவுக்கு நீங்கள் பதிலளித்த விதமும், அளித்த நேர்மறையான ஆலோசனைகளும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி தெரிவித்த பிரதமர்

உங்கள் அன்பு தொடர்ந்து நீடிக்கும், நமது பிணைப்பு இன்னும் வலுவடையும் என்றும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்சியினருக்கு பாஜக அறிவுறுத்தல்

இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கட்சியினருக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும், அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து மத்திய அமைச்சர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே மோடியின் செல்ஃபி விடீயோக்கள் வெளியாகிறது என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் மூலம் தவெக ஆட்சியை பிடித்ததாக கூறப்பட்ட நிலையில், திமுக உள்ளிட்ட கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

303 மில்லியன் பார்வைகள்

பிரதமர் மோடியின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் ஏராளமான பார்வைகளைப் பெற்றது.

24 மணி நேரத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கு அதிகபட்ச பார்வைகளைப் பெற்றதன் மூலம் மோடி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதுவரை அந்த ரீல் வீடியோ 303 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனை ஒரு நாளில் 300 மில்லியன் பார்வைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் அதிகரிப்பு

ஏராளமானோர் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை புதிதாக ஃபாலோ செய்துள்ளனர். ஒரே நாளில் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராமை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக ஃபாலோ செய்யத் தொடங்கியுள்ளனர்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in