உலகின் பாதுகாப்பான நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்தை முந்திய இந்தியா

World Safest Country Ranking 2025 : உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து விட இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
World Safest Country Ranking 2025
World Safest Country Ranking 2025
1 min read

நம்பியோ தரவுத் தளம் கணிப்பு :

World Safest Country Ranking 2025 : நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. உலகளவில் மிகக் குறைந்த குற்ற விகிதம், வலுவான பாதுகாப்பு, சிறப்பான உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

முதலிடத்தில் அன்டோரா :

நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக அன்டோரா உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள சிறிய ஐரோப்பிய நாடுதான் அன்டோரா. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய 3 மத்திய கிழக்கு நாடுகள், முதல் ஐந்து நாடுகளில் இடம்பெற்றுள்ளன. ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை(Top 10 Safest Countries List) பிடித்துள்ளன.

66வது இடத்தில் இந்தியா :

147 நாடுகளை நம்பியோ தரவுத் தளம் வரிசைப்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இந்த முறை சரிவை சந்தித்துள்ளன. அதேசமயம், இந்த நாடுகளை முந்தியுள்ள இந்தியா இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66வது இடத்தை பிடித்துள்ளது(India Rank in Safest Country List). இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடமும் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடமும் பிடித்துள்ளன.

15வது இடத்தில் சீனா, 65 இடத்தில் பாகிஸ்தான் :

தெற்காசிய நாடுகளில், சீனா 76.0 புள்ளிகளுடன் 15வது இடத்தில் உள்ளது. இலங்கை 59வது இடத்தையும், பாகிஸ்தான் 65வது இடத்தையும், வங்கதேசம் 126வது இடத்தையும் பிடித்துள்ளன.

மோசமான நாடு வெனிசுலா :

தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக(Unsafest Countries List 2025) வெனிசுலா உள்ளது. மோசமான பாதுகாப்பு கொண்ட நாடுகள் பட்டியலில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா, பெரு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

தரவுகளை பயன்படுத்தி பட்டியல் தயாரிப்பு :

பயனாளர்கள் அளிக்கும் தரவுகளை பயன்படுத்தி நம்பியோ பாதுகாப்பு குறியீடு தொகுக்கப்படுகிறது. குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூகம் மற்றும் காவல் பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in