சர்வாதிகார போக்கால் 3ம் உலகப்போர் : நிதின் கட்கரி எச்சரிக்கை

Nitin Gadkari on World War III Countdown: சர்வாதிகார போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் 3ம் உலகப் போருக்கு வாய்ப்பு இருப்பதாக, அமைச்சர் நிதின் கட்கரி அச்சம் தெரிவித்துள்ளார்.
Minister Nitin Gadkari says World War III at anytime
Minister Nitin Gadkari says World War III can break out anytimeANI
1 min read

அதிகரிக்கும் சர்வாதிகார போக்கு :

Nitin Gadkari on World War III Countdown : டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்,

உலகம் முழுவதும் மோதல் போக்கு நிலவுவதாகவும், சர்வாதிகார எண்ணம் மேலோங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்பதை சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு பகுதிகளில் போர்ச்சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு :

இதனால், உலகம் அழிவை நோக்கி மெதுவாகச் செல்வதாகவும், மத்தியக் கிழக்கில் போர் முடிந்தாலும் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை. ரஷ்யா உக்ரைன் மோதல்(Russia Ukraine War) தொடர்கிறது, சீனா தைவான்(China Taiwan World War) இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இவை பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

உலகப் போருக்கு வாய்ப்பு? :

நிலைமை கைமீறிச் சென்றால் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. வல்லரசு நாடுகளின் சர்வாதிகாரம் காரணமாக உலகில் ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு மறைந்து வருகிறது. உலகம் முழுவதும் மோதல் போக்கு நிலவி வருகிறது என்பதை நிதின் கட்கரி(Nitin Gadkari) சுட்டிக் காட்டினார்.

புத்தரின் பூமி இந்தியா :

உண்மை, அகிம்சை மற்றும் அமைதி ஆகியவற்றை உலகிற்குச் சொல்லித் தரும் புத்தரின் பூமியாக இந்தியா இருப்பாகப் புகழ்ந்த அவர், சர்வதேச சூழலை ஆய்வு செய்து எதிர்காலத்திற்கு ஏற்ப சரியான கொள்கைகள் முடிவுகளை இந்தியா எடுக்கும் என்றார்.

மனித குலத்திற்கு ஆபத்து :

ஏவுகணைகள் மற்றும் டிரோன்களின் பயன்பாடு அதிகரித்து, மேம்பட்ட தொழில்நுட்பத்தால் போர் முறைகள் மாறிவிட்டன. மனித குலத்தைப் பாதுகாப்பது கடினம் இவை அனைத்திற்கும் மத்தியில், மனிதக்குலத்தைப் பாதுகாப்பது கடினமாகி விட்டது.

பெரும்பாலும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இது ஒரு கடுமையான பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் சர்வதேச அளவில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகவே இருக்கிறது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in