
ஏமனில் பணியாற்றிய கேரள நர்ஸ் :
Kerala Nurse Nimisha Priya Yemen Case in Tamil : கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36 வயதாகும் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். பல மருத்துவமனைகளில் நர்சாக பணியாற்றிய அவர், பின்னர், அந்தநாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக, 'கிளினிக்' துவக்கினார்.
நிமிஷாவை ஏமாற்றிய ஏமன் நாட்டவர் :
நிமிஷா பிரியாவின் வருமானம்(Nimisha Priya), கிளினிக்கின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. கொடுமைகளில் இருந்து தப்பிக்க நினைத்த நிமிஷா, 2017ம் ஆண்டில் தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் இறங்கினார். மயக்க மருந்து அதிகமாக செலுத்தப்பட்டதால் தலால் உயிரிழந்தார்.
நிமிஷா வழக்கு, மரண தண்டனை :
அவரை நிமிஷா பிரியா(Nimisha Priya Murder Case) விஷ ஊசி போட்டு கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு ஏமன் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் 2023ம் ஆண்டு நிமிஷாவக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நிமிஷா பிரியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசு நடவடிக்கை, முன்னேற்றம் :
அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி, நிமிஷா பிரியா(Nimisha Priya) சார்பாக மத்திய அரசிடம் முறையிடப்பட்டது. மேலும் நிமிஷாவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தலாலின் குடும்பத்தாருடன் இந்திய மதத் தலைவர் அப்துல்லா நடத்திய பேச்சுவார்த்தைக்கும் நல்ல பலன் கிடைத்தது.
மரண தண்டனை நிறுத்திவைப்பு :
இந்நிலையில், நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏமனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிறை அதிகாரிகளுடன் பேசியதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போதைக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டாலும், நிரந்தரமாக நிமிஷாவை சிறையில் இருந்து விடுவிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
====