ஏஐயின் தாக்கம் குறித்து ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது
ZOHO founder Sridhar Vembu describe Impact Of AI in India : சோஹோ நிறுவனம் பிட்ஸ் டூ Atom (பிட்ஸ்-இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டம் -மெட்டிரீயல் சையின்ஸ், நானோ டெக்னாலஜி, பேட்டரி டெக்னாஜி, கெமிக்கல்ஸ்) பெரிய ட்ரான்ஸ்பர்மேஷன் நடந்து வருவதாகவும் ,
அதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓர் அடித்தளமாக இருக்கும் கலந்துகொண்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பகிர்ந்துகொண்டார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியை தொடங்கும் ZOHO
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சோஹோ நிறுவனம் அடுத்த 2, 3 வருடங்களில் விஞ்ஞானிகள், டெக்னிஷியன்களை எடுத்து புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணிகள் மேற்கொள்ள போவதாகவும் . இங்கு கண்டுபிடிப்புகள் நடக்கும். அதன்பிறகு அது வணிக நோக்கத்துக்காக கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்
சோடியம் பேட்டரி டெக்னாலஜி
ZOHO சோடியம் பேட்டரி டெக்னாலஜி வருங்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்த சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு .
ஆனால், அது ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்றும் கார்பன் பைபர் ட்ரோன் டெக்னாலஜி, மிசேல் டெக்னாலஜி என நம் தேசத்துக்கு பல விதங்களுக்கு தேவைப்படுகிறது. அதை செய்ய முடியுமா என்பதையும் ஆராய்ச்சி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக வலைதள தடை குறித்து பேசிய ஸ்ரீதர் வேம்பு
செல்போன், ஏஐ டெக்னாலஜி என எதுவாக இருந்தாலும் குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும் தொழில்நுட்பத்தை குழந்தைகளோடு கலக்க விடக்கூடாது.
13 வயது குழந்தைகள் சமூக வலைப்பின்னல்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் ஆந்திராவில் கொண்டு வரப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டு பேசினார்
ஏஐ பயன்பாட்டை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்
ஏஐ டெக்னாலஜியில் பல ஆபத்துக்கள் இருந்தாலும், நல்ல விஷயங்கள் அதில் நிறைய இருப்பதாகவும் . ஆகவே அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். ஏஐ டெக்னாலஜியில் இந்தியாவும் பெரிய சக்தியுள்ள நாடு என்பதை இப்போது நாம் நிலைநாட்ட ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார்.