குழந்தைப்பேறு தள்ளிப் போகிறதா? கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் இதோ!

தம்பதியரின் கருத்தரிப்புத் திறனை இயற்கையாகவே அதிகரிக்கும் வால்நட், சிட்ரஸ் பழங்கள், சியா விதைகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ளுங்கள்.
Is conception being delayed? Here are the best foods to boost fertility!
Is conception being delayed? Here are the best foods to boost fertility!source:Ai generated
1 min read

Is conception being delayed? Here are the best foods to boost fertility!

குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் தம்பதியர்

இன்றைய மாறிவரும் நவீன வாழ்க்கைச் சூழல் மற்றும் வேலைப்பளு காரணமாக, திருமணமான தம்பதியரிடையே குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்துள்ளது.

கருவுறுதலில் பிரச்சனை

அதேநேரம், தாமதமான திருமணம் மற்றும் முறையற்ற வாழ்வியல் மாற்றங்களால் இயற்கையாகக் கருவுறுவதிலும் பலருக்கு சவால்கள் ஏற்படுகின்றன.

குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வு

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சீரான உடல் எடை பராமரிப்பு, லேசான உடற்பயிற்சிகள் மற்றும் தேவையெனில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது இந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்.

அவற்றுடன், தம்பதியரின் கருத்தரிப்புத் திறனை இயற்கையாகவே மேம்படுத்த உதவும் சில முக்கிய உணவுகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

1. நட்ஸ் மற்றும் விதைகள்

வால்நட்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.

தினமும் 75 கிராம் வால்நட் சாப்பிட்டு வருவது ஆண்களின் விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரித்து, கருவுறுதலை எளிதாக்குகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

சியா விதைகள்: ஒமேகா-3, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ள சியா விதைகள், ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவுகின்றன.

இது கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும்.

2. சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரிகள்

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதிலுள்ள 'பாலிஅமின்கள்' தம்பதியர் இருவருக்குமே இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

பெர்ரி வகைகள்: ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்றவை விந்தணுக்களின் இயக்கத்திற்கும், பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரிகின்றன.

3. மீன் மற்றும் காய்கறி வகைகள்

சால்மன் மீன் : ஒமேகா-3 அமிலம் அதிகம் உள்ள சலாமன் போன்ற மீன்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

தக்காளி: வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த தக்காளி, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

பருப்பு மற்றும் பீன்ஸ்: இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தம்பதியரின் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை நீக்கி, கருவுறுதலுக்கு வழிவகுக்கின்றன.

4. தானியங்கள் மற்றும் பால் பொருட்கள்

முழு தானியங்கள்: கோதுமை போன்ற முழு மற்றும் சிறு தானியங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சரியாக நிர்வகிக்க உதவுகின்றன. இது மறைமுகமாகக் கருத்தரிப்பு செயல்பாட்டிற்கு துணையாக இருக்கும்.

கெட்டித் தயிர் மற்றும் சீஸ்: கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த இவற்றை அன்றாட உணவில் அளவாக சேர்த்துக் கொள்வது நல்லது.

மருத்துவரின் கண்காணிப்பு கட்டாயம்

மிக முக்கியமாக மருத்துவரின் பரிந்துரையின் படி உங்கள் உடல் நலனுக்கு ஏற்றபடி உணவு பழக்கங்களை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது. அதனால் உங்கள் உடல்நலன் குறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in