வறண்ட சருமம் இனி கவலையில்லை! : 4 எளிய வழிகளில் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சரும வறட்சி மற்றும் அரிப்பைத் தடுத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவும் 4 எளிய வழிமுறைகள்.
No more worrying about dry skin! Get glowing skin in 4 simple ways!
No more worrying about dry skin! Get glowing skin in 4 simple ways!source:Ai generated
2 min read

No more worrying about dry skin! Get glowing skin in 4 simple ways!

பருவநிலை மாறும் காலங்களில் பலருக்கும் ஏற்படும் மிகப்பெரிய சவால் சரும வறட்சி, தோல் வெடிப்பு மற்றும் அரிப்பு போன்ற தொல்லைகளாகும். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு இருப்பது வறண்ட சருமமா அல்லது நீர்ச்சத்து குறைந்த சருமமா என்பதில் குழப்பமடைகிறார்கள்.

சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் நயம் (Oil) குறைவது 'டிரை ஸ்கின்' (Dry Skin) எனப்படும். அதே நேரத்தில், உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படுவது 'டீஹைட்ரேட்டட் ஸ்கின்' (Dehydrated skin) ஆகும்.

இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரிசெய்து, சருமத்தை எப்போதும் பொலிவோடு வைத்திருக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் 4 எளிய வழிமுறைகள் இதோ:

1. உடலுக்குள் தேவையான நீர்ச்சத்து

சருமப் பராமரிப்பு என்பது உள்ளுக்குள் கொடுக்கும் ஊட்டச்சத்தில் இருந்தே தொடங்குகிறது. வறட்சியைத் தடுக்க தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

தேவையான அளவு பழங்கள்

இவற்றுடன் தர்பூசணி, வெள்ளரிக்காய், பூசணிக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினசரி உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

2. ஒமேகா-3 மற்றும் ஆரோக்கிய உணவுகள்

சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பையும் பளபளப்பையும் தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நட்ஸ் வகைகளில் அதிகம் உள்ளன. பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளையும், பசுமையான கீரைகளையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வர வேண்டும்.

இவற்றில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சரும செல்களைப் புதுப்பித்து ஆரோக்கியமாக வைக்கின்றன.

3. சரியான குளியல் முறை மற்றும் பிஹெச் சோப்புகள்

அதிக வெப்பம் கொண்ட வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சுடுதண்ணீர் சருமத்தின் அடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையை முற்றிலும் உறிஞ்சி, வறட்சியைத் தீவிரமாக்கிவிடும்.

கெமிக்கல் வீரியம் குறைந்த சோப்

எனவே, எப்போதும் மிதமான வெதுவெதுப்பான நீரையே குளிக்கப் பயன்படுத்த வேண்டும். மேலும், சருமத்தின் மென்மைத்தன்மையைப் பாதுகாக்க pH 5.5 அளவு கொண்ட வீரியம் குறைந்த சோப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

4. மேஜிக் 'த்ரீ-மினிட் ரூல்'

குளித்து முடித்தவுடன் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஸ்டெப் இதுவாகும். குளித்து முடித்த 3 நிமிடங்களுக்குள், சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் காய்வதற்கு முன்பே தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை அப்படியே லாக் செய்து நீண்ட நேரத்திற்குப் பாதுகாக்கும்.

கூடுதல் டிப்ஸ்

பகல் நேரத்தில் வெளியில் செல்லும் போது, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் சருமம் மேலும் வறண்டு போவதைத் தடுக்க, தகுந்த சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்த மறக்கக் கூடாது.

இந்த 4 எளிய வாழ்வியல் மாற்றங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, வறண்ட சருமப் பாதிப்புகளில் இருந்து தப்பித்து, எப்போதும் பொலிவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற முடியும்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in