மீதமான சப்பாத்தியில் சுவையான ஸ்பிரிங் ரோல் செய்யலாம் வாங்க...!

Spring Roll Chapati Recipe in Tamil : சப்பாத்தி மீந்துபோனால் இனி கவலை வேண்டாம்... சுவையான , க்ரிஸ்பியான ஸ்பிரிங் ரோல் செய்யலாம்.
Spring Roll Chapati Recipe Making of Delicious spring rolls made with leftover chapatis at Home Tips in Tamil
Spring Roll Chapati Recipe Making of Delicious spring rolls made with leftover chapatis at Home Tips in TamilSource : Google
1 min read

Spring Roll Chapati Recipe in Tamil : பெரும்பாலான இல்லத்தரசிகளின் கவலையே மீதமான உணவு பண்டங்களை என்ன செய்வது என்பதுதான். அவற்றை தூக்கிப்போடவும் மனம் வராமல் என்ன செய்வது என்று தெரியாமல் என குழப்பத்திலேயே இருப்பர். அப்படிப்பட்ட இல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் பற்றி தான் இன்று பார்க்க போகிறோம். மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான , க்ரிஸ்பியான ஸ்பிரிங் ரோல் செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

  1. மீதமான சப்பாத்தி

  2. தேவையான அளவு எண்ணெய்

  3. இஞ்சி, பூண்டு விழுது

  4. உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் (அல்லது) ஏற்கெனவே வீட்டில் மீதமான பொரியல்

  5. பச்சை மிளகாய்

  6. கார்ன்ஃப்ளார் மாவு

  7. சோயா சாஸ்

  8. விருப்பப்பட்டால் பன்னீர் அல்லது சிக்கன்

  9. தேவைக்கேற்ப உப்பு

செய்முறை

ஒரு கடாயில் தேவைக்கேற்ப எண்னெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைபதம் வேக வைக்கவும். தேவைபட்டால் சிக்கன் அல்லது பன்னீர் சேர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான மசாலா மற்றும் சிறிதளவு தனியா தூள், தனிமிளகாய் தூள், கரம் மசாலா முதலானவற்றை சேர்த்து இறுதியாக சிறிதளவு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , சோயா சாஸ் சேர்த்து கிளறி, அடுப்பிலிருந்து எடுத்து நன்கு ஆறவிடவும்.

ஸ்பிரிங் ரோல் தயாரிக்க

ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கார்ன்ஃப்ளார் மாவை போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒட்டும் பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். பின்பு சப்பாத்தியை எடுத்து தேவைபட்டால் அதன் விளிம்புகளை அகற்றிக்கொள்ளலாம். இல்லையென்றால் அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது ஸ்பிரிங் ரோல் கலவையும், ஸ்பிரிங்ரோல் செய்வதற்கான சப்பாத்தி தாளும் தயார்.

ஸ்பிரிங் ரோல் ரெடி

சப்பாத்தியை உங்களுக்கு பிடித்த மாதிரியான வடிவத்தில் வைத்து அதனுள்ளே ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து, ஒட்டுவதற்கு தயார் செய்த கார்ன்ஃப்ளார் கலவையால் ஓரங்களை ஒட்டிவிடவும். நேரமிருந்தால் ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். அதன் பின்னர் மிதமான சூட்டில் எண்ணெயில் போட்டு எடுத்தால் அவ்வளவு தான் சுவையான , க்ரிஸ்ப்பியான சப்பாத்தி ஸ்பிரிங் ரோல் தயார்.

ஏன் சப்பாத்தியில் ஸ்பிரிங்ரோல் நல்லது தெரியுமா?

மீதமான சப்பாத்தி ஏற்கெனவே வெந்துவிட்டது . அதிக நேரம் வேக வைக்க வேண்டும் என்றில்லை. அதனால் அதிக எண்ணெயில் பொறிக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. மிதமான எண்ணையே போதுமானது. மேலும் மைதாவில் செய்த ஸ்பிரிங் ரோலை விட கோதுமையில் செய்யப்பட்ட சப்பாத்தி உடலுக்கும் நல்லது. அதனால் இனிமேல் உங்கள் வீட்டில் சப்பாத்தி மீந்துவிட்டால் என்ன செய்வது என கவலைப்படாமல் ஒருமுறை இந்த சப்பாத்தி ஸ்பிரிங் ரோலை செய்து பாருங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in