சிக்கலில் சித்தராமையா : ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத்துறை அதிரடி, சித்தராமையாவுக்கு நெருக்கடி
சிக்கலில் சித்தராமையா : ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்
https://x.com/PanditSaibpal/status/1852371154922524797/photo/1
1 min read

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தொடர்புடைய 'மூடா' ஊழல் வழக்கில், 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, சித்தராமயனஹுண்டி கிராமம் ஆகும்.

'மூடா' என்று அழைக்கப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, முதலமைச்சர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சித்தராமையாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்த ஊழல் வழக்கில், இதுவரை 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in